காந்தியை காணவில்லை ..!!! எஸ்பிஐ வங்கியிலிருந்து எடுத்த புது 2௦௦௦ ரூபாயால்  பெரும் பரபரப்பு ...!!!

பழைய  ரூபாய் நோட்டு செல்லாது என  அறிவிக்கப்பட்ட பின்னர், தற்போது புது 2000  ரூபாய்  நோட்டு வெளிவந்துள்ளது.தற்போது புழக்கத்தில் உள்ள இந்த  ரூபாய்   நோட்டில் எது  இருக்கிறது எது இல்லை  என  புரிந்துக்கொள்ளும்  அளவில்  மக்கள் இன்னும் பழக வில்லை தான்  அதற்காக  காந்தி  படம்  இல்லை  என்றாலுமா  கண்டுப் பிடிக்க மாட்டாங்க...?

அதாவது,  மத்திய பிரதேசத்தில் உள்ள  எஸ்பிஐ  வங்கியில்  மகாத்மா காந்தி படம் இல்லாத ரூ. 2000 நோட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம், சொபூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் விவசாயி ஒருவர் பணம் எடுத்துள்ளார். ஆனால் அவர் எடுத்த ரூ. 2000 நோட்டில் மகாத்மா காந்தியின் படம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது  குறித்து வங்கியில் விளக்கம்  கேட்டுள்ளார்.

தற்போது,  எப்படி  காந்தி படம் இல்லாமல் , புதிய ரூபாய் நோட்டு வெளிவந்தது  என  விசாரணை  நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம்  மத்திய  பிரதேச  மாநிலம்  மட்டுமல்ல, அனைவரையுமே யோசிக்க  வைத்துள்ளது.  குறிப்பாக , அப்பகுதி  மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.