Asianet News TamilAsianet News Tamil

World's longest river cruis:51 நாட்கள் நதியில் பயணிக்கும் சொகுசு கப்பல்: 13ம்தேதி பிரதமர் மோடி தொடக்கம்

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி முதல் அசாம் திப்ருகார்க் வரை வங்கதேசம் வழியாக நதியில் 51 நாட்கள் பயணிக்கும் சொகுசு கங்கை படகை பிரதமர் மோடி வரும் 13ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

the world's longest river cruise, which Prime Minister Narendra Modi will launch on January 13
Author
First Published Jan 10, 2023, 1:48 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி முதல் அசாம் திப்ருகார்க் வரை வங்கதேசம் வழியாக நதியில் 51 நாட்கள் பயணிக்கும் சொகுசு கங்கை படகை பிரதமர் மோடி வரும் 13ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

உலகிலேயே நதியின் வழியாகநீண்ட தொலைவாக 3200 கி.மீ பயணிக்கும் முதல் சொகுசு கப்பல் கங்கை க்ரூஸ்-( luxury Ganga cruise )ஆகத்தான் இருக்கும். 

எம்.வி. கங்கா விலாஸ் எனப் பெயரிடப்ட்ட இந்த கப்பல், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள 27 நதிகளைக் கடந்து 51 நாட்கள் பயணிக்கிறது. உலக நினைவுச்சின்னங்கள், வனச்சரணாலயங்கள் உள்ளிட்ட 50 வகையான சுற்றுலாத் தளங்களை இந்த கப்பலில் பயணிக்கும் பயணிகள் பார்க்க முடியும்.

பிரதமர் மோடி மருத்துவத்துக்கு ஒரு ரூபாய்கூட செலவு செய்யவில்லையாம்!

the world's longest river cruise, which Prime Minister Narendra Modi will launch on January 13

உத்தரப்பிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, “ வாரணாசியிலிருந்து வங்கதேசம் வழியாக திப்ருகார் வரை செல்லும் கங்கா விலாஸ் எனும் சொகுசு கப்பலை வரும்13ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 27 நிதிகளில் பயணிக்கும் இந்த கப்பல் 50 நாட்கள் பயணித்து 3200 கி.மீ தொலைவைக் கடக்கும். 

பீகாரில் பாட்னா, ஜார்க்கண்டில் சாஹிப்கன்ஞ், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, வங்கதேதச்தில் தாகா, அசாமில் குவஹாட்டி, ஆகிய நகரங்கள் வழியாகச் செல்லும் இந்தக் கப்பல் மார்ச் 1ம்தேதி திப்ருகார்க் வந்து சேரும். 

இந்தக் கப்பல் சுந்தரவனக் காடுகள், காசிரங்கா தேசியப் பூங்கா, பல்வேறு தேசிய பூங்காக்கள், நினைவுச்சின்னங்கள் வழியாகச் செல்ல இருக்கிறது. இந்த சொகுசு கப்பலில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த பயணம் மறக்க முடியாத, மகிழ்ச்சிதரக்கூடியதாக இருக்கும். இசை, கலாச்சார நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி, ஸ்பா, உணவு விடுதிகள் என பல்வேறு வசதிகளை கொண்டதாக கப்பல் இருக்கும்
கப்பலில் உள்ள வசதிகள்

ஜோஷிமத் நிலச்சரிவு! ஜனநாயக அரசு எதற்காக இருக்கிறது! அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்ற மறுப்பு

the world's longest river cruise, which Prime Minister Narendra Modi will launch on January 13

எம்வி கங்கா விலாஸ் கப்பல் 3 அடக்குகளைக் கொண்டது, 80 சுற்றுலாப் பயணிகள்வரை பயணிக்கலாம். 18 வகையான சூட்கள், பல்வேறு சொகுசு வசதிகள் இந்தக் கப்பலில் உள்ளன. இந்த கப்பலில் ஒருநபர் பயணிக்க தினசரி ரூ.25 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

the world's longest river cruise, which Prime Minister Narendra Modi will launch on January 13

வாரணாசியில் வரும் 13ம் தேதி புறப்படும் இந்தக் கப்பல் பக்ஸர், ராம்நகர், காஜிப்பூர் வழியாக 8-வது நாள் பாட்னாவை அடையும். பாட்னாவில் இருந்து புறப்பட்டு 20வது நாள் மேற்குவங்கத்தில் பராக்கா, முர்சிதாபாத் வழியாக கொல்கத்தாவை சென்றடையும். அங்கிருந்து வங்கதேச எல்லையான தாகா சென்று அங்கு 15 நாட்கள் பயணித்து, இறுதியாக அசாமில் உள்ள திப்ருகார் வந்தடையும். 

கடந்த 5 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகளில் 79% உயர் சாதியினர்,2%எஸ்சி,சிறுபான்மையினர்

the world's longest river cruise, which Prime Minister Narendra Modi will launch on January 13

இந்தக் கப்பலை தனியார் நிறுவனம் மேலாண்மை செய்கிறது, மத்திய கப்பல் மற்றும் துறைமுகம் நீர்வழித்துறை அமைச்சகம் சார்பில்  இன்லாண்ட் வாட்டர்வேஸ் அத்தாரிட்டிஆப் இந்தியா இயக்குகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios