Joshimath Sinking:ஜோஷிமத் நிலச்சரிவு! ஜனநாயக அரசு எதற்காக இருக்கிறது! அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்ற மறுப்பு
உத்தரகாண்ட் மாநிலம், ஜோஷிமத் நகரில் ஏற்பட்டும் நிலச்சரிவு குறித்து அவசரமாக விசாரிக்க வேண்டும் எனக் கோரி ஸ்வாமி அவிமுக்தேஸ்வரானாந்த் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உத்தரகாண்ட் மாநிலம், ஜோஷிமத் நகரில் ஏற்பட்டும் நிலச்சரிவு குறித்து அவசரமாக விசாரிக்க வேண்டும் எனக் கோரி ஸ்வாமி அவிமுக்தேஸ்வரானாந்த் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த மனுவை வரும் 16ம் தேதிதான் விசாரிக்க முடியும். முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து விஷயங்களும் எங்களிடம் வரத் தேவையில்லை, அதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
தொடர்ந்து மண்ணில் புதையும் கிராமங்கள்.. செயற்கைகோள் மூலம் கண்காணிப்பு - என்ன தான் நடக்கிறது ?
ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக கடும் நிலச்சரிவும், அதைத் தொடர்ந்து நிலத்தில் பாளம் பாளமாக வெடிப்புகளும், வீடுகளில் சுவரில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. பல வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டன.
இதையடுத்து, ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரையும் பாதுகாப்பான பகுதிகளுக்கும், நிவாரண முகாம்களுக்கும் மாற்றும் பணியில் உத்தரகாண்ட் அரசு ஈடுபட்டுள்ளது. உத்தரகாண்ட் அரசுடன், தேசியபேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே மத்தியநிலவியல் பிரிவு, புவியியல் வல்லுநர்கள், அறிவியல் வல்லுநர்கள் குழு என பலரும் ஜோஷிமத்தில் முகாமிட்டு அங்குள்ள சூழலை ஆய்வு செய்து வருகிறார்கள்.
அத்திபட்டியாக மாறும் ஜோஷிமத்’: நிவாரண முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்றும் உத்தரகாண்ட் அதிகாரிகள்
இதற்கிடையே உத்தரகாண்டில் உள்ள இந்து மடாதிபதி ஸ்வாமி அவிமுக்தேஸ்வரானாந்த் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில் “ ஜோஷமத்தில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவு, நிலவெடிப்பு, வீடுகளில் விரிசல் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் இங்குள்ள தேசியப் பேரிடர் நிதி மற்றும் பேரிடர் அமைப்பு மூலம் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும். வீடுகளையும், உடைமைகளையும் இழந்த மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்கிட வேண்டும்.
உத்தரகாண்டில் வணிகயம், தொழில்மயம், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவித்தல், நகர்மயமாக்கள், இயற்கை வளங்களை அழித்தல் போன்றவற்றால்தான் இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுகின்றன. இந்த பேரழிவுகளைக் காரணமாக வைத்து இங்குள்ள மக்களை வெளியேற்ற முடியாது. இங்கு வசிப்பது மக்களின் அடிப்படை உரிமை.
மக்களின் உயிருக்கு விலை வைத்து எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளும், திட்டப்பணிகளும் தேவையில்லை. இங்கு நடக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டியது மாநில அரசு,ம த்திய அரசின் கடமை. இதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஜோஷிமத்தில் நடக்கும் சம்பவங்களை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்.இதனை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்
இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டிருந்தது
ஜோஷிமத் நிலச்சரிவு: பிரதமர் அலுவலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி வி.பி.நரசிம்மா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் “ இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது. நாட்டில் முக்கியமான ஒவ்வொன்றையும் எங்களிடம் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது, அவர்கள் கவனிப்பார்கள். அவர்களுக்குட்பட்ட அனைத்து விஷயங்களையும் அவர்கள் கவனிப்பார்கள். இந்த மனுவை வரும் 16ம் தேதி விசாரிக்கிறோம்” என உத்தரவிட்டனர்