PM Modi medical expenses: பிரதமர் மோடி மருத்துவத்துக்கு ஒரு ரூபாய்கூட செலவு செய்யவில்லையாம்!
பிரதமர் நரேந்திர மோடி தனது மருத்துவ சிகிச்சைகளுக்காக எவ்வளவு செலவு செய்கிறார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
புனேவைச் சேர்ந்த ப்ரபூல் ஷர்தா என்பவரின் தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பத்துக்கு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. இந்த பதிலில் பிரதமர் நரேந்திர மோடியின் மருத்துவச் செலவினங்கள் பற்றி பிரதமர் அலுவலகம் பதிவு செய்து வைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அதை பயன்படுத்தவில்லை என்றும் பிரதமரின் மருத்துவச் செலவுக்கு என்று எந்தத் தொகையும் செலவு செய்யப்படவில்லை என்றும் பிரதமர் அலுலவக பதிலில் கூறப்பட்டுள்ளது.
Modi Archive: பிரதமர் மோடியின் இளமைக்கால வெளிநாட்டுப் பயணங்கள்!
மேலும் 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரை இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, அரசின் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட பிரதமரின் தனிப்பட்ட மருத்துவ சிகிச்சைக்காகச் செலவு செய்யவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆர்.டி.ஐ. மூலம் இந்தத் தகவலைக் கோரிய பிரபூல் சர்தா இதுபற்றிக் கூறுகையில், “ஆரோக்கியமான இந்தியா இயக்கத்தை மக்களுக்கு செய்தியாகச் சொல்வதோடு நில்லாமல், தானே அவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருந்து 135 கோடி இந்தியர்களையும் ஊக்குவிக்கிறார்” என்கிறார்.