MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Modi Archive: பிரதமர் மோடியின் இளமைக்கால வெளிநாட்டுப் பயணங்கள்!

Modi Archive: பிரதமர் மோடியின் இளமைக்கால வெளிநாட்டுப் பயணங்கள்!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாளை முன்னிட்டு மோடி ஆர்கைவ் என்ற ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த அரிய புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

1 Min read
Author : SG Balan
Published : Jan 09 2023, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

2003ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1915ஆம் ஆண்டு இதே ஜனவரி 9ஆம் தேதியில்தான் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பைக்கு திரும்பி வந்தார். அந்த நாளை நினைவில் கொள்ளும் வகையில்தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இதனை முன்னிட்டு மோடி ஆர்கைவ் என்ற ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த அரிய புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

37

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். பாஜகவின் தொண்டராக செயல்பட்ட காலத்திலிருந்து அவர் பல்வேறு வெளிநாட்டுப் பயணங்கள் செய்திருக்கிறார்.

47

மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது அந்நாடுகளில் உள்ள இந்தியர்களைச் சந்தித்து அவர்களுடன் நெருக்கமாகப் பழகி நட்பு கொண்டிருக்கிறார்.

57

1990களில் அவர் வெவ்வேறு கண்டங்களைச் சேர்ந்த நாடுகளுக்குச் சென்றுள்ளார். “நான் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அந்தப் பயணங்கள் எனக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தன. உலகம் எந்தத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது, எத்துறைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன, இந்தியாவின் நிலை எங்கே இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்துகொள்ள பயணங்கள் உதவியிருக்கின்றன” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

67

2003ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த முதல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாள் நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். அரசு நிர்வாகத்தை டிஜிட்டல்மயமாக்கவது, சுற்றுலாவை மேம்படுத்துவது முதலியவை பற்றி அன்று பேசினார்.

77

ஆண்டுதோறும் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாள் விழா நாட்டின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்திய புலம்பெயர் மக்கள்
நரேந்திர மோடி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெறும் ரூ.7 லாட்டரி சீட்டு... ஓவர் நைட்டில் அடித்த ரூ.1 கோடி ஜாக்பாட்: கூலித் தொழிலாளியின் வாழ்க்கையை மாற்றிய பம்பர் பரிசு!
Recommended image2
உலகின் டாப் 10 மாசடைந்த நகரங்கள்.. லிஸ்ட்டில் 7 இந்திய இடங்கள்.. டெல்லி இல்லை!
Recommended image3
Petrol Price 1947: 1947-ல் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா? இப்போது ரூ.100-ஐத் தாண்டியது ஏன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved