Supreme Court Verdict on Demonetisation: பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளிக்கிறது.
2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளிக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தது. இதன்படி, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்து. இதற்கு பதிலாக புதிய ரூ.2000, ரூ.500, ரூ.100 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி! நிதிஷ்குமார் போட்ட மாஸ்டர் பிளான்.. 2024 ஆட்டம் ஆரம்பம்
புழக்கத்தில் இருந்த பணம் பெருவாரியாக வங்கி செயல்முறைக்குச் சென்றது. அதற்கு மாற்றாக போதுமான அளவு பணம் அச்சடிக்காமல் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்ததால் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். தங்கள் பணத்தையே வங்கியிலிருந்து எடுக்க முடியாமலும், ஏடிஎம்களில் இருந்து எடுக்க முடியாமல் கடும் வேதனை அடைந்தனர். ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் பணம் எடுக்க வரிசையில் நின்ற பலர் உயிரிழந்தனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதிகளிடம் இருந்து கள்ளநோட்டு ஒழிக்கப்படும், தீவிரவாதம் ஒழிக்கப்படும், கள்ளநோட்டுகள் வங்கிக்குள் வந்துவிடும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் ரிசர்வ் வங்கியின் இறுதி அறிக்கையில் நாட்டில் புழக்கத்தில் இருந்த பணமும், ரிசர்வ் வங்கிக்கு வந்த பெரிதாக மாற்றமில்லை எனத் தெரிவித்தது. அதாவது, கள்ளநோட்டுகள் எதிர்பார்த்த அளவு சிக்கவில்லை எனத் தெரியவந்தது.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சட்டத்துக்கு உட்பட்டு செய்யப்பட்டதா என்று விசாரிக்க உத்தரவிடக்கோரி 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையில்,நீதிபதிகள் பிஆர் காவே, ஏஎஸ் போண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மீண்டும் சிலிண்டர் விலை ரூ. 25 உயர்ந்தது..! ஹோட்டல்களில் உணவு பொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு
வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு வைத்த வாதத்தில் “ பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு திட்டமிட்டு, ஆலோசித்து எடுக்கப்பட்டது. கள்ளநோட்டு, தீவிரவாத ஒழிப்பு, கறுப்பு பணம், வரி ஏய்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக எடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கை” எனத் தெரிவித்தது.
மனுதாரர்கள் சார்பில் வாதாடிய முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் வாதிடுகையில் “ கள்ளநோட்டுகள், கறுப்புப்பணம் ஆகியவற்றை தடுக்க மாற்றுவழிகளை மத்திய அரசு தேடாமல் பணமதிப்பிழப்பை அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பணமதிப்பிழப்பு கொண்டுவருவதர்குமுன் ரிசர்வ் வங்கி நவம்பர் 7ம் தேதி, ரிசர்வ் வங்கி ஆய்வுக் கூட்டத்தில் பேசப்பட்டவிஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை மத்திய அரசை வைத்துக்கொண்டது. இதை வெளியிடவில்லை” எனத் தெரிவித்தார்
ரிசர்வ் வங்கி தரப்பில் வைத்த வாதத்தில் “ தேசத்தை கட்டமைக்கும் பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் மக்களுக்கு சில சிரமங்கள் இருந்தது, சிரமங்களைச் சந்தித்தார்கள். ஆனால், குறுகிய காலத்தில் சந்தித்த சிரமங்களை போக்க, அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனத் தெரிவி்க்கப்பட்டது.
மத்திய அரசின் புத்தாண்டுப் பரிசு! மாதம் 5 கிலோ உணவு தானியங்கள்!
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது. இந்த வழக்கு டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- 2016 demonetisation
- 6 year of demonetisation
- SC Demonetisation Judgment Today
- SC verdict on demonetization
- Supreme Court Verdict on Demonetisation
- Supreme Court demonetisation case
- Supreme Court demonetisation judgment
- Supreme Court verdict on demonetisation Live
- Supreme court
- Verdict on demonetization
- demonetisation
- demonetisation 2016
- demonetisation class 12
- demonetisation class 12 business studies
- demonetisation date
- demonetisation decision
- demonetisation effect
- demonetisation expose
- demonetisation in hindi
- demonetisation in india
- demonetisation india
- demonetisation judgement today
- demonetisation meaning
- demonetisation modi
- demonetisation supreme court
- demonetisation verdict supreme court
- demonetisationz
- demonetization
- demonetization in india
- demonetization india
- features of demonetisation
- rbi demonetisation
- what is demonetisation