ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை நிலவரம் குறித்து ஆக்ஸ்ட் 23 ஆம் தேதிக்குள் சிபிஐ  பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக பல்நோக்கு கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குழு எந்த அறிக்கையும் தாக்கல் செய்யாமல் இழுக்கடித்து வந்தது. 

இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள விசாரணையை நீதிமன்றமே கண்காணிக்க வேண்டும் என்று பேரறிவாளன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து சிபிஐ பன்நோக்கு அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டனர். 

இதற்கு பதிலளித்த சிபிஐ வழக்கறிஞர் சதிகாரர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களை  கண்டுபிடிக்க காலதாமதமாவதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை நிலவரம் குறித்து ஆக்ஸ்ட் 23 ஆம் தேதிக்குள் சிபிஐ  பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.