Gyanvapi Masjid case கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்துக்கு பாதுகாப்பு நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு மறுஉத்தரவு வரும்வரை தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு மறுஉத்தரவு வரும்வரை தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
கியான்வாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி வழக்கு:வாரணாசி நீதிமன்றம் ஒத்திவைப்பு
இதை விசாரித்த நீதிமன்றம், மசூதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை நியமித்தது. அந்த குழுவினர் மசூதியை ஆய்வுசெய்து வீடியோ எடுத்தனர், அப்போது, மசூதியில் ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கிடையே இந்த குழுவின் ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் ஒருதரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மே 17ம்தேதி மாவட்ட நீதிமன்றத்துக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது அதில் “ கியான்வாபி ஸ்ரீங்கர் பகுதியில், சர்வே செய்யப்பட்ட இடத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என உத்தரவிட்டது.
கியான்வாபி மசூதி: இந்து பெண்கள் மனு விசாரணைக்கு உகந்தது: வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு
அதேநேரம், கியான்வாபி மசூதிக்குள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும், வழிபாடு செய்யவும் எந்தவிதமான தடையும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்துக்கு வழங்கப்பட்ட இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவு வரும் 12ம்தேதி(நாளை)யுடன் முடிகிறது. இதையடுத்து, பாதுகாப்பை நீடிக்கக் கோரி இந்து அமைப்புகள் சார்பில் வழக்கறிஞர் விஷ்னு சங்கர் ஜெயின் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி டிஒய்சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ இந்த வழக்கை விசாரிக்க விரைவில் தனியாக அமர்வு உருவாக்கப்படும். சிவலிங்கத்துக்கு அளித்துவரும் பாதுகாப்பு மறு உத்தரவு வரும் தொடர வேண்டும், இதை மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
வாரணாசி கியான்வாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு:144 தடை உத்தரவு; விவரம் என்ன?
கியான்வாபி மசூதி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட அனுமதி வழங்குகிறோம்.
அதேநேரம், அலகாபாத் உயர் நீதிமன்றம், கியான்வாபி மசூதி குறித்து சர்வே செய்ய சர்வே ஆணையரை நியமித்ததை எதிர்த்து, மசூதியின் மேலாண்மைக் குழுவான அன்ஜுமன் இத்ஸ்மியா மஸ்ஜித் தாக்கல் செய்த மனுவுக்கு இந்து அமைப்புகள் அடுத்த 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.