gyanvapi masjid case: கியான்வாபி மசூதி: இந்து பெண்கள் மனு விசாரணைக்கு உகந்தது: வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சுவற்றில் உள்ள இந்துக் கடவுள் சிலைகளை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உக்ந்ததுதான் என்று மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சுவற்றில் உள்ள இந்துக் கடவுள் சிலைகளை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உக்ந்ததுதான் என்று மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
மாவட்ட நீதிபதி ஏ.கே. விஷ்வேஷ் கடந்த மாதம் தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினார்.
75 ஆண்டுகளுக்குப்பின்!இந்தியா வரும் 'சீட்டா' சிறுத்தை புலிகள் !நமிபியாவிலிருந்து வருகை
வழக்கு விவரம்
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம், மசூதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை நியமித்தது. அந்த குழுவினர் மசூதியை ஆய்வுசெய்து வீடியோ எடுத்தனர், அப்போது, மசூதியில் ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனாவில் சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழப்பில் முரண்பட்ட தகவல்கள்: மத்திய அரசு குழப்பமான பதில்
இதற்கிடையே இந்த குழுவின் ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் ஒருதரப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும், சிவில் நீதிமன்றத்தில் இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவையும் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த மே 20ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 21ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “ மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதி வழக்கில் என்ன தீர்ப்பு வழங்குகிறது என்று பார்க்கலாம். அதன்பின் இந்த வழக்கை விசாரிக்கிறோம் எனத் தெரிவித்து அக்டோபர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் மாவட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரித்து முடித்து தீர்ப்பை கடந்த மாதம் ஒத்தி வைத்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து வாரணாசி நகரம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை போலீஸார் பிறப்பித்தனர், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
புரட்சிகர சாது’ துவராக பீடம் சங்கராச்சார்யா ஸ்வரூபானந்தா காலமானார்
இந்த வழக்கில் மாவட்ட நீதிபதி ஏ.கே. விஷ்வேஷ் அளித்த தீர்ப்பில் “ இந்துப் பெண்கள் 5 பேர் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு உகந்ததுதான். இந்துப் பெண்கள் தாக்கல் செய்த மனு மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். அடுத்த விசாரணை வரும் 22ம் தேதி நடக்கும்” எனத் தீர்ப்பளித்தார்.
இந்த மனுவை விசாரிக்கக் கூடாது எனக் கூறி தாக்கல் செய்த முஸ்லிம்கள் தரப்பு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் வெற்றி பெற்ற இந்து பெண்கள் தரப்பில் மஞ்சு வியாஸ் கூறுகையில் “இன்று பாரதம் மகிழ்ச்சியாக இருக்கும். என்னுடைய இந்து சகோதரர்கள், சகோதரிகள் தீபம் ஏற்றி மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும்” எனத் தெரிவித்தார்
மற்றொரு மனுதாரர் சோஹன் லால் ஆர்யா கூறுகையில் “இந்து சமூகத்துக்கு கிடைத்த வெற்றி. அடுத்த விசாரணை வரும் 22ம் தேதி நடக்கிறது. கியான்வாபி கோயிலுக்கு அடிக்கல் இது அடிக்கல் . மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் தரப்பில் அஞ்சுமன் இந்திஜாமியா மஸ்ஜித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மிராகுதின் சித்திக் கூறுகையில் “ இந்த வழக்கில் மாவட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்” எனத் தெரிவித்தார்.