மற்றொரு புயல்? அடுத்த 48 மணி நேரத்தில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் எச்சரிக்கை

ஜூன் 7 ஆம் தேதிக்குள் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

The next storm? A low pressure area is likely to form in the Arabian Sea by June 7.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “  தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.” என்று தெரிவித்துள்ளது. ஜூன் 5 முதல் 7-ம் தேதிக்குள் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளது. எனினும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறுமா என்பது வரும் நாட்களில் தெரிய வரும். 

கடந்த மாதம் உருவான மோச்சா புயல் பங்களாதேஷ்-மியான்மர் கடற்கரையைத் தாக்கி, பரவலான சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த புயல் ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயர்ந்தனர். பேரழிவை ஏற்படுத்திய சில வாரங்களுக்குப் பிறகு வானிலை மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

195 கிமீ வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆபத்தான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், தெற்கு அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்கள் சூறாவளியின் விளைவாக கனமழையை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்போது, அதிகாரிகளும் மக்களும் அதன் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தி உள்ளது. இந்திய வானிலை மையத்தின் இந்த முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் வானிலை முறைகளின் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவை பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்திய வானிலை மையம், வடமேற்கு மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் மழைப்பொழிவு கணிப்புகளையும் வெளியிட்டுள்ளது. வடமேற்கில், உத்தரகாண்டில் ஒரு சில இடங்களில் ஜூன் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் தெற்குப் பகுதியில், கேரளாவில் ஜூன் 5 வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நாட்டின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஜூன் 5-ஆம் தேதி வரை. கூடுதலாக, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஜூன் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் வெப்பம் நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியா - சவுதி கடற்படை கூட்டுபயிற்சி.. சவுதி கடற்படை வீரர்களை சந்தித்த இந்திய கடற்படை தளபதி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios