Asianet News TamilAsianet News Tamil

குழந்தை இறந்ததாக கூறிய மருத்துவமனை...?அடக்கம் செய்த இடத்தில் உயிர்பிழைத்த அதிசயம்..! உறவினர்கள் ஆச்சர்யம்

பிரசவத்தின் போது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்திருந்த நிலையில், அடக்கம் செய்ய சென்ற இடத்தில் குழந்தை உயிர் பிழைத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The miracle of resurrection has taken place on the way to the dead baby cemetery at the Jammu and Kashmir Hospital.
Author
Jammu, First Published May 24, 2022, 8:35 AM IST

பிறந்த குழந்தை இறந்தது

ஜம்முகாஷ்மீர் பகுதியில் உள்ள ரம்பன் மாவட்டத்தை சேர்ந்த பஷரத் அகமது என்பவரின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து துணை மாவட்ட  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு மருத்துவர்கள் குழந்தையை சோதித்து பார்த்துள்ளனர்.  உடலில் எந்தவித அசைவும் இல்லாத காரணத்தால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பஷரத் அகமதுவின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். இதனையடுத்து குழந்தையை அடக்கம் செய்ய உறவினர்கள் மயானத்திற்கு கொண்டு சென்று உள்ளனர்.

The miracle of resurrection has taken place on the way to the dead baby cemetery at the Jammu and Kashmir Hospital.

மயானத்தில் உயிர் பிழைத்த குழந்தை

அப்போது குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த பஷரத் அகமதுவின் குடும்பத்தினர் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு குழந்தையை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக ஶ்ரீநகர் கொண்டு செல்லும் படி அறிவுறுத்தினர்.  இதற்கிடையே உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கூறிய மருத்துவமனை முன்பு பஷரத் அகமதுவின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை மருத்துவ துறை அதிகாரி சமாதானம் செய்தார். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது உறுதியளித்தார். உயிருடன் பிறந்த குழந்தையை கவனக்குறைவால் இறந்ததாக அறிவித்த மருத்துவர் மற்றும் செவிலியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios