Kharge:நாய் என்ற சொல்! காங்கிரஸ்-பாஜக இடையே கடும் வாக்குவாதம்: மக்களவை ஒத்திவைப்பு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று கேட்டு மக்களவையில் பாஜக வலியுறுத்தியது. இதனால் காங்கிரஸ், பாஜக எம்.பிக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று கேட்டு மக்களவையில் பாஜக வலியுறுத்தியது. இதனால் காங்கிரஸ், பாஜக எம்.பிக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் நகரில் அளித்த பேட்டியில் இந்தியா, சீனா எல்லைப் பிரச்சினையைப் பற்றி பேசினார்.
என்சிஇஆர்டி(NCERT) பாடப் புத்தகத்தில் ‘பகவத் கீதை’ யின் சில பகுதிகள் சேர்ப்பு: மத்திய அரசு தகவல்
அப்போது அவர் கூறுகையில் “ இந்த தேசத்துக்காக காங்கிரஸ் கட்சியும், தொண்டர்களும் ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளார்கள். பாஜகவினர் என்ன செய்தார்கள். பாஜக வளர்க்கும் நாய்கூட இந்த தேசத்துக்காக உயிரிழந்துள்ளதா” எனத் தெரிவித்தார்.
மல்லிகார்ஜூன கார்கே நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தியது தொடர்பாக இன்று காலை மக்களவை தொடங்கியது முதல் பாஜக எம்.பிக்கள் கடும் அமளியில்ஈடுபட்டனர். இந்த தேசத்திடமும், அவையிலும் மல்லிகார்ஜூன கார்கே தான் பேசியதற்கு மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இரு கட்சியினரும் அவையின் மையப்பகுதிக்கு என்று கடுமையாக கோஷமிட்டு, வாக்குவாதம் செய்ததால் கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மற்றும் மத்திய இணைஅமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அவையை 11.30 மணிவரை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில் “ சுதந்திரத்துக்குப்பின் காங்கிரஸ் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என மகாத்மா காந்தி தெரிவித்தார்.
கார்கே அதற்கு வாழும் உதாரணம்.காந்திஜி கூறியது உண்மை என கார்கே நிரூபித்துவிட்டார். ஒரு கட்சியின் தேசியத் தலைவராக இருந்து கொண்டு, எவ்வாறு பேசுவதென்று தெரியவில்லை. அவர் மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் இல்லை.
பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு… பல்வேறு விவகாரம் குறித்து ஆலோசனை!!
பாஜகவிடமும், நாடாளுமன்றத்திடமும், மக்களிடமும் கார்கே தான் பேசியதற்கு மன்னிப்புக் கோர வேண்டும். ஆல்வார் நகரில் கார்கே பேசியது நாகரீகமற்றது. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் துரதிர்ஷ்டமானது. அந்த வார்த்தைகளை, அவர் பேசியதை நான் கண்டிக்கிறேன். அடிப்படை ஆதாரமற்றவற்றை இந்த தேசத்தின் முன் கொண்டு வர முயல்கிறார்.கார்கே மன்னிப்புக் கோர வேண்டும்
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்