பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு… பல்வேறு விவகாரம் குறித்து ஆலோசனை!!
வருங்காலத்தில் தொழில்நுட்ப ரீதியினாலான நல்லுறவை எதிர்நோக்குவதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தில் தொழில்நுட்ப ரீதியினாலான நல்லுறவை எதிர்நோக்குவதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து சுந்தர் பிச்சை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் புகையிலை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வருவாய்… மத்திய அரசு தகவல்!!
அதில், பிரதமருடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பிரதமர் மோடியின் நிர்வாகத்தின் கீழ் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றும் ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பேற்றுள்ளதற்கு முழு ஆதரவை அளிக்கிறேன். வருங்காலத்தில் தொழில்நுட்ப ரீதியினாலான நல்லுறவை எதிர்நோக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் கட்டாயம் செல்ல வேண்டிய 10 இடங்களும் அதன் சிறப்பம்சங்களும்!!
இதேபோல் சுந்தர் பிச்சையை சந்தித்தது குறித்து பிரதமர் மோடியும் தனது டிவிட்டர் பக்கத்தில், சுந்தர் பிச்சை உங்களை சந்தித்தது புதுமை. தொழில்நுட்பம் மற்றும் பல விஷயங்கள் குறித்து விவாதித்ததில் மகிழ்ச்சி. மனித சமுதாய முன்னேற்றம் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு உலகம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.