Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் புகையிலை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வருவாய்… மத்திய அரசு தகவல்!!

புகையிலை பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி மூலம் ரூ.19 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

13 thousand crore gst revenue from tobacco in tamilnadu
Author
First Published Dec 19, 2022, 8:54 PM IST

புகையிலை பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி மூலம் ரூ.19 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புகையிலை பொருட்களை வழங்குவதற்காக பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்கள் செலுத்திய மொத்த மத்திய சரக்கு மற்றும் சேவை வரியின் மாநில/யூனியன் பிரதேச வாரியான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் 2021 – 22 ஆம் ஆண்டில் ரூ.1,369.12 கோடி புகையிலை மூலம் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல், ஜம்மூ-காஷ்மீரில் 2021 – 22 ஆம் ஆண்டில் ரூ.3,26.80 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: ஹலால் இறைச்சிக்கு தடை! கர்நாடக அரசு மசோதா கொண்டு வருகிறது

ஹிமாச்சல் பிரதேஷம் – 82.40 கோடி, பஞ்சாப் – 200.15 கோடி, சண்டிகர் – 28.14 கோடி, உத்தரகாண்ட் – 190.99 கோடி, ஹரியானா – 454.15 கோடி, டெல்லி – 652.05 கோடி, ராஜஸ்தான் – 1285.17 கோடி, உத்தரப்பிரதேசம் – 2624.97 கோடி, பீகார் – 461.48, சிக்கிம் – 9.15 கோடி, அருணாச்சல பிரதேசம் – 22.85 கோடி, நாகலாந்து – 25.09 கோடி, மணிப்பூர் – 10.70 கோடி, மிசோரம் – 8.27 கோடி, திரிபுரா – 76.18 கோடி, மேகாலயா – 61.14 கோடி, அசாம் – 512.82 கோடி, மேற்கு வங்கம் – 1219.83 கோடி, ஜார்கண்ட் – 145.30 கோடி, ஒடிசா – 439.18 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக உலகை ஒன்றிணைக்கிறது… மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்!!

சத்தீஸ்கர் – 306.50 கோடி, மத்திய பிரதேசம் – 957.15 கோடி, குஜராத் – 2181.87 கோடி, தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ – 4.10 கோடி, மகாராஷ்டிரா – 1557.96 கோடி, கர்நாடகா - 1729.02 கோடி, கோவா – 67.66 கோடி, லட்சத்தீவு – 0.09 கோடி, கேரளா – 716.25 கோடி, புதுச்சேரி – 6.78 கோடி, அந்தமான் & நிக்கோபார் – 7.02 கோடி, தெலுங்கானா – 715.88 கோடி, ஆந்திர பிரதேசம் – 864.14 கோடி, லடாக் – 8.46 கோடி என மொத்தம் ரூ. 19,328.81 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios