NCERT: என்சிஇஆர்டி(NCERT) பாடப் புத்தகத்தில் ‘பகவத் கீதை’ யின் சில பகுதிகள் சேர்ப்பு: மத்திய அரசு தகவல்
என்சிஆர்டி பாடப்புத்தகத்தில் பகவத் கீதை குறித்த சில கருத்துக்கள், 6 மற்றும் 8-ம் வகுப்பு பாடங்களிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு சமஸ்கிருத பாடப்புத்தகத்தில் ஸ்லோகங்களும் சேர்க்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தள்ளது.
என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் பகவத் கீதை குறித்த சில கருத்துக்கள், 6 மற்றும் 8-ம் வகுப்பு பாடங்களிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு சமஸ்கிருத பாடப்புத்தகத்தில் ஸ்லோகங்களும் சேர்க்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தள்ளது.
மத்திய கல்வித்துறை இணைஅமைச்சர் அன்னபூர்னா தேவி நேற்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார் அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் கட்டாயம் செல்ல வேண்டிய 10 இடங்களும் அதன் சிறப்பம்சங்களும்!!
2020 ஆம் ஆண்டில் மத்திய கல்விஅமைச்சகம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் (ஏஐசிடிஇ) இந்திய அறிவு அமைப்பு (ஐகேஎஸ்) பிரிவை நிறுவியது. இதன் நோக்கம், இந்திய அறிவுசார் அமைப்புகளின் (ஐகேஎஸ்) அனைத்து அம்சங்களிலும் இடைநிலை மற்றும் பரிமாற்ற ஒழுக்க ஆராய்ச்சியை மேம்படுத்துதலாகும். இந்திய அறிவு முறையை பாதுகாத்து, பரப்பி, அடுத்த கட்ட ஆய்வு மூலம் சமூக்தில் அதை செயல்படுத்துதலாகும்
என்சிஇஆர்டி, தேசியஅளவிலான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பொருட்டு, பல்வேறு அறிவுசார் தரப்பினரிடமும் ஆலோசனைகளைப் பெற்று வருகிறது. குறிப்பாக பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிடமும் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.
பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு… பல்வேறு விவகாரம் குறித்து ஆலோசனை!!
என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் பகவத் கீதை குறித்த சில கருத்துக்கள், 6 மற்றும் 8-ம் வகுப்பு பாடங்களிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு சமஸ்கிருத பாடப்புத்தகத்தில் ஸ்லோகங்களும் சேர்க்கப்பட்டுள்ளது
தேசிய கல்விக்கொள்கை 2022, பத்தி 4.27 எதைக் குறிக்கிறது என்றால், இந்தியாவின் பாரம்பரிய அறிவு நிலையானது மற்றும் அனைவரின் நலனுக்காக உழைப்பதாகும். இந்த நூற்றாண்டில் அறிவு ஆற்றல் மிக்க சக்தியாக மாறுவதற்கு நமது பாரம்பரியத்தைப் புரிந்துகொண்டு, இந்திய வழியை நாம் உலகிற்குக் கற்பிக்க வேண்டும்.
கர்நாடக சட்டசபைக்குள் வீர சவார்க்கர் புகைப்படம்: காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டம்
இவ்வாறு அன்னபூர்னா தேவி தெரிவித்தார்