Parle G பிஸ்கட் பாக்கெட்டில் உள்ள குழந்தை யார்?.. அது சுதா மூர்த்தியின் சிறுவயது புகைப்படம் தானா? உண்மை என்ன?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பல ஆண்டுகளாக இந்தியாவின் பல மாநிலங்களில் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பிஸ்கட் பார்லே ஜி தான்.

1939ம் ஆண்டு முதல் இந்த பிஸ்கட்டுகள் மக்களின் புழக்கத்தில் உள்ளது, அதேபோல 90களில் இந்த பிஸ்கட்டுகள் மிகப்பெரிய அளவில் சிறுவர்களால் விரும்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் புகழ்பெற்று விளங்கிய பிஸ்கட்டுகளில் பார்லேஜி முக்கியமானது.
அதேபோல அன்றைய காலகட்டத்தில் இந்த பார்லேஜி பிஸ்கட்டின் கவரில் வரும் குழந்தை யார் என்று கேள்வி பரவலாகவே எழுந்து வந்தது. மேலும் அந்த குழந்தை, பிரபல கல்வியாளரும், எழுத்தாளரும் மற்றும் இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவருமாக உள்ள சுதா மூர்த்தி தான் என்று பலரும் கூறி வந்தனர்.
ஜெய்பூர் - மும்பை விரைவு ரயில் துப்பாக்கிச்சூடு: இழப்பீடு அறிவிப்பு!
ஒரு கட்டத்தில் அந்த தகவல் உண்மை என்று நம்பும் அளவிற்கு, அந்த குழந்தைக்கும், தற்போது உள்ள சுதா மூர்த்தி அவர்களின் முகத்திற்கும் பல ஒற்றுமைகள் இருந்து வந்தது. சுதா மூர்த்தி தான் சிறு வயதாக இருக்கும் பொழுது பார்லே ஜி பிஸ்கட் நிறுவனத்திற்கு போஸ் கொடுத்ததாகவும், அவருடைய புகைப்படம் தான் அதில் இருக்கிறது என்றும் செய்திகள் பரவத்துவங்கியது.
ஆனால் இதுகுறித்து ஒரு முறை கூட சுதா மூர்த்தி, நான்தான் அந்த குழந்தை என்று எப்பொழுதும் கூறியதில்லை. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து இந்த புதிருக்கான விடை தற்பொழுது கிடைத்துள்ளது. பார்லே ஜி, நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஒருவர் இது குறித்து பேசிய பொழுது "இது 60களின் தொடக்கத்தில் அப்போது இருந்த எங்கள் நிறுவனத்தின் சில கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கற்பனை முகம் என்று கூறியுள்ளார். எந்த ஒரு தனி நபரையும் கொண்டு இது வரையப்படவில்லை என்று அவர் கூறி ஒரு மாபெரும் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.