Asianet News TamilAsianet News Tamil

blood donation camp:பிரதமர் மோடி பிறந்தநாளன்று மிகப்பெரிய ரத்த தான முகாம் நடத்த மத்திய அரசு முடிவு

பிரதமர் மோடியின் பிறந்தநாளான வரும் 17ம் தேதி நாடுமுழுவதும் மிகப்பெரிய அளவில் ரத்ததான முகாமை  நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த ரத்ததான முகாமுக்கு, “ ரக்தான் அம்ரித் மகோத்சவ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

The Health Ministry launches a nationwide blood donation campaign beginning on September 17
Author
First Published Sep 13, 2022, 9:32 AM IST

பிரதமர் மோடியின் பிறந்தநாளான வரும் 17ம் தேதி நாடுமுழுவதும் மிகப்பெரிய அளவில் ரத்ததான முகாமை  நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த ரத்ததான முகாமுக்கு, “ ரக்தான் அம்ரித் மகோத்சவ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ரத்ததான முகாம் மூலம் ஒரு லட்சம் யூனிட் ரத்தத்தை சேகரிக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநரின் அழைப்பை ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால்… போலீஸ் தடுத்தும் சொன்னதை செய்து காட்டி அசத்தல்!!

The Health Ministry launches a nationwide blood donation campaign beginning on September 17

இந்த ரத்ததான முகாம் மூலம் ரத்த வங்கிகளுக்கு ஏராளமான ரத்தம் கிடைக்கும். அதுமட்டும்மல்லாமல் எந்த மாதரியான ரத்த வகைகள் அதிகமாக இருக்கிறது, அரிதான ரத்த வகைகள் உள்ளவர்கள் யார் என்பதை வைத்து புள்ளிவிவரங்கள் சேகரிக்க முடியும். அவசரத் தேவைக்கு அவர்களின் உதவியை நாட முடியும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த ரத்ததான முகாம் வரும் அக்டோபர் 1ம் தேதிவரை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. அன்றைய தினம் தேசிய ரத்ததானநாளாகும்.

வரும் 17ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாளும் வருகிறது, அதையொட்டி இந்த ரத்த தான முகாமையும் தேசிய அளவில் மத்தியஅரசு நடத்துகிறது குறி்ப்பிடத்தக்கது.

The Health Ministry launches a nationwide blood donation campaign beginning on September 17

ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வெளியே செல்ல தடை... உச்சநீதிமன்றம் அதிரடி!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் “ ரக்த்தான் அமிர் மகோத்சவ்  முகாம் மூலம் ரத்த தானம் செய்ய விரும்புவோர் ஆரோக்கிய சேது செயலி மூலம் பதிவு செய்யலாம். பிரதமரின் மனிதநேய இயக்கத்தில் இயக்கத்தின் ஒருபகுதியாக மக்கள் ரத்ததானம் செய்யலாம்.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கிராம, நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சி அளவில் பிரச்சாரங்கள் செய்யவும், முகாம் அமைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த முகாமில் மத்திய அரசின் அனைத்து துறைகள், அமைச்சர்கள், அமைச்சகங்களையும் ஈடுபடுத்தவும், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், மக்கள், குறி்ப்பாக இளைஞர்களின் பங்களிப்பைஅதிகமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்,பல்வேறு தொண்டுநிறுவனங்கள், சமூக இயக்கங்களையும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

The Health Ministry launches a nationwide blood donation campaign beginning on September 17

சிஏஏ சட்டத்துக்கு எதிராக 220 மனுக்கள்: வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

இந்த தகவலையும், ரத்ததான முகாம் குறித்தும் அனைத்து மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதார நல மையங்கள், ரத்த வங்கிகள், பல்வேறு தரப்புகளுக்கும் தகவல் அளித்து அவர்களை ஈடுபடுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

ரத்ததானம் குறித்த தகவல்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள இ-ரக்த்கோஷ் இணையதளம் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களில் சேகரிக்கப்பட்ட ரத்தம் குறித்த தகவல்கள் இடம்பெறும். “ எனத் தெரிவித்தார்
 
Follow Us:
Download App:
  • android
  • ios