ஆட்டோ ஓட்டுநரின் அழைப்பை ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால்… போலீஸ் தடுத்தும் சொன்னதை செய்து காட்டி அசத்தல்!!
ஆட்டோ ஓட்டுநரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டில் அமர்ந்து உணவருந்தும் டெல்லி முதல்வரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆட்டோ ஓட்டுநரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டில் அமர்ந்து உணவருந்தும் டெல்லி முதல்வரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் முகமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் கேஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் லால்தனி என்பவர், நான் உங்களின் மிகப்பெரிய ரசிகர். பஞ்சாபில் நீங்கள் ஒரு ஆட்டோ ஓட்டுனரின் வீட்டில் உணவு அருந்தியதை பார்த்து இருக்கிறேன்.
இதையும் படிங்க: எங்கள் வீட்டில் சாப்பிட வாருங்கள் என அழைத்த ஆட்டோ ஓட்டுநர்; உடனே ஒப்புக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!!
அதேபோல எனது வீட்டுக்கும் சாப்பிடுவதற்கு வருவீர்களா? என்று அரவிந்த் கேஜ்ரிவாலிடம் கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், நான் நிச்சயமாக உங்களது வீட்டுக்கு வருகிறேன். நான் உங்களது வீட்டுக்கு இன்று இரவே சாப்பிட வரலாமா? என்னுடன் கட்சியைச் சேர்ந்த மேலும் இருவர் வருவார்கள். நான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு வந்து என்னை நீங்கள் உங்களது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு உங்களது வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றார். இதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர் வருவதாக தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ் ட்ரவுசரில் தீ.. காங்கிரஸ் வெளியிட்ட சர்ச்சை படம் - ரவுண்ட் கட்டிய பாஜக தலைவர்கள்
அதன்படி, இரவு 7.30 மணியளவில் ஹோட்டலில் இருந்து புறப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்டோவில் ரிக்ஷா ஓட்டுநரின் வீட்டை அடைய திட்டமிட்டார். அப்போது பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இதை அடுத்து ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்டோ ஓட்டுநருடன் அமர்ந்து உணவருந்தினார்.