caa: caa supreme court:சிஏஏ சட்டத்துக்கு எதிராக 220 மனுக்கள்: வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 220 மனுக்கள் மீதான விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 220 மனுக்கள் மீதான விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு. லலித், நீதிபதி ரவிந்திர பாட் ஆகியோர் அடங்கி அமர்வு இந்த மனுக்களை இன்று விசாரித்தது.
அமித் ஷா‘மப்ளர்’ விலை ரூ.80ஆயிரம் தெரியுமா!பாஜகவுக்கு அசோக் கெலாட் பதிலடி
மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனு கடந்த 2019ம் ஆண்டு, டிசம்பர் 18ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
2019ம் ஆண்டு, டிசம்பர் 11ம் தேதி, குடியுரிமைத் திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் வெடித்தன. 2020ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
உலக சராசரியைவிட இந்தியாவின் பால் உற்பத்தி 3 மடங்கு உயர்வு: பிரதமர் மோடி பெருமிதம்
இந்த சட்டத்துக்கு எதிராக கேரளாவைச் சேர்ந்த ஐயுஎம்எல் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூமா மொய்த்ரா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி, காங்கிரஸ் மூத்ததலைவர் தேபாப்ரத்தா சாய்க்கா, தொண்டு நிறுவனங்கள், சிட்டிசன்ஸ் அகைன்ஸ்ட் ஹேட், அசாம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, சட்டமாணவர்கள் என 220 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே இந்தச் சட்டத்தை எதிர்த்து 2020ம் ஆண்டு கேரள அரசே உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மொத்தமாக, தலைமை நீதிபதி யுயு. லலித், நீதிபதி ரவிந்திர பாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவின் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.