rahul:amit shah: bharat jodo yatra:அமித் ஷா‘மப்ளர்’ விலை ரூ.80ஆயிரம் தெரியுமா!பாஜகவுக்கு அசோக் கெலாட் பதிலடி
உள்துறை அமைச்சர் அமித் ஷா கழுத்தில் அணிந்திருக்கும் மப்ளரின் விலை ரூ.80ஆயிரம், பாஜக தலைவர்கள் கண்களில்அணிந்திருக்கும் சன் கிளாஸ் விலை ரூ.2.50 லட்சம் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா கழுத்தில் அணிந்திருக்கும் மப்ளரின் விலை ரூ.80ஆயிரம், பாஜக தலைவர்கள் கண்களில்அணிந்திருக்கும் சன் கிளாஸ் விலை ரூ.2.50 லட்சம் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை சென்று வருகிறார். அவர் அணிந்திருந்த வெள்ளை நிற டிஷார்ட் பர்பெரி நிறுவனத்தின் டி-ஷர்ட்டாகும். இதன் விலை ரூ.41,257.
இதைக் குறிப்பிட்டு பாஜக கடந்த வாரம் ட்விட்டரில் விமர்சித்திருந்தது.
உலக சராசரியைவிட இந்தியாவின் பால் உற்பத்தி 3 மடங்கு உயர்வு: பிரதமர் மோடி பெருமிதம்
“தேசமே பாருங்கள்” என்ற வாசகத்துடன் ராகுல் காந்தி டி ஷர்ட் அணிந்திருக்கும் படத்தையும், அதன் அருகே மற்றொரு டிஷர்ட் படத்தையும் பதிவிட்டு பாஜக விமர்சித்துள்ளது.
தற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பதிலடி தரப்பட்டுள்ளது. ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பாரத் ஜோடோ யாத்திரைக்கு வந்துள்ள கூட்டத்தைப் பார்த்து ஏன் அச்சப்படுகிறீர்கள். வேலையின்மை, பணவீக்கத்தைப் பற்றி பேசுங்கள். ஆடைகளைப் பற்றி பேசுவென்றால், நாங்கள் மோடியின் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடையையும், அவர் அணியும் ரூ.15 லட்சம் கண்ணாடியையும் பேச வேண்டியதிருக்கும்.சொல்லுங்கள் என்ன செய்யலாம்” எனக் கேட்கப்பட்டுள்ளது.
தேசமே பாருங்க! ராகுல் காந்தி அணியும் 41,000 ரூபாய் மதிப்புள்ள T-shirt: விளாசும் பாஜக
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் இன்று ஜெய்பூரில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ பாரத் ஜோடோ யாத்திரைக்கு அதிகளவில் மக்களிடம் வரவேற்பு இருப்பதைப் பார்த்து பாஜக கவலைப்படுகிறது.
பாரத் ஜோடோ யாத்திரை குறித்து பாஜகவுக்கு என்ன கவலை. ராகுல் காந்தி அணிந்திருந்த டி ஷர்ட் பேசினார்கள். பாஜக தலைவர்கள் அணிந்திருக்கும் சன் கிளாஸ் ரூ.2.50 லட்சம், அமித் ஷா அணிந்திருக்கும் மப்ளர் ரூ.80ஆயிரமாக இருக்கிறது. டி ஷார்ட் வைத்து பாஜகவினர் அரசியல் செய்கிறார்கள்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதைப் பார்த்து பாஜக தலைவர்கள் கவலைப்படுகிறார்கள். பிரதமர், உள்துறை அமைச்சர், மற்ற தலைவர்களுக்கு ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தும், தாக்கியும் பேச பணி கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்