Asianet News TamilAsianet News Tamil

”என்னது சீதையை கடத்தியது ராமரா?” இது என்ன புது பாடம்? குழப்பத்தில் +2 மாணவர்கள்.

the great mistake in Gujarat 12 Sanskrit book
the great mistake in Gujarat 12 Sanskrit book
Author
First Published Jun 1, 2018, 6:31 PM IST


குஜராத் மாநிலத்தில்  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட புத்தகத்தில், இடம் பெற்றிருக்கும் ஒரு பாடம், இந்துக்கள் மத்தியில் கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சமஸ்கிருத பாடபுத்தகத்தின் 106வது பக்கத்தில் ”ராமர் சீதையை கடத்தி சென்றதாக ஒரு பாடத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது”. மேலும் சீதையின் அழகை லட்சுமனன் ராமருக்கு வர்ணித்து கூறுவது போலவும் அந்த பாடத்தில் வருகிறது.

என்ன இது புதுமையான பாடமாக இருக்கிறது. யாராவது தங்கள் கற்பனை வளத்தில் புதுவித ராமாயணம் எழுதி இருக்கிறார்களா? என இந்த பாடம் குறித்து கேலியாக கேள்வி எழுப்பி இருக்கின்றனர் சிலர்.

இந்த பாடம் குறித்து பேசிய குஜராத் மாநில கல்வி அதிகாரி தெரிவிக்கையில், இது மொழி பெயர்ப்பில் ஏற்பட்டிருக்கும் பிழை. ராவணன் எனும் இடத்தில் ராமன் என தவறுதலாக அச்சிடப்பட்டுவிட்டது. விரைவில் இந்த தவறு சரி செய்யப்பட்டுவிடும் என தெரிவித்திருக்கிறார். ஒரு வேளை இவங்க கூகுள் டிரான்ஸ்லேட்-ல மொழி பெயர்ப்பு செஞ்சிருப்பாங்க போல!

Follow Us:
Download App:
  • android
  • ios