Asianet News TamilAsianet News Tamil

Demonetisation: முறையான பொருளாதாரத்தை விரிவுபடுத்தவே பணமதிப்பிழப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, முறையான பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதிதான், உருமாற்ற பொருளாதாரக் கொள்கை நடவடிக்கை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

The government informs the Supreme Court that demonetization was a component of a larger plan to boost the formal economy.
Author
First Published Nov 17, 2022, 9:37 AM IST

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, முறையான பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதிதான், உருமாற்ற பொருளாதாரக் கொள்கை நடவடிக்கை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது, ரொக்கப் பணப்பொருளாதாரத்தில் இருந்து டிஜிட்டல் பொருளதாரத்துக்கு மாற்றவும், அதிகமான வருமானவரி செலுத்துவோர்களை கொண்டுவரவும், கள்ளநோட்டுகளைக் கண்டுபிடிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என மத்தியஅரசு தெரிவித்தது.

The government informs the Supreme Court that demonetization was a component of a larger plan to boost the formal economy.

கடந்த 2016, நவம்பர் 6ம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்தது. நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெற்றது. இந்த திடீர் நடவடிக்கையால் மக்கள் பெரிய அவதிக்குள்ளாகினர், சிறு,குறு,நடுத்தரத் தொழில்கள் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்தன, மக்களும் தங்கள் சேமிப்பை எடுக்க முடியாமல் மோசமாகப் பாதிக்கப்பட்டன. 

ஜி20 மாநாட்டில் முக்கியத்துவம் பெற்ற சதுப்பு நிலக்காடு எவ்வாறு இயற்கை அழிவுகளை பாதுகாக்கிறது?

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விசாரிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை ஒன்றாக இணைத்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்ட நோக்கம் குறித்து ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மத்திய அரசு சார்பில் நேற்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் “ பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது முறையான பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் பொருளாதார மாற்றத்துக்கான நடவடிக்கையின்ஒரு பகுதிதான். ரொக்கப்பணப் பொருளாதாரத்தில் இருந்து டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதி. பணமதிப்பிழப்பு காலத்தில் 80 சதவீதம் ரொக்கப்பணம் புழக்கத்தில்இருந்தது. முறையான பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதிலும் சிக்கல் இருந்தது.

அவமானம்.! இந்திய இருமல் சிரப் காரணமாக குழந்தைகள் மரணம் - இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வேதனை

ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குபின், டிஜிட்டல் பரிமாற்றத்தின் அளவு அதிகரித்தது. 2016ம் ஆண்டில் மட்டும் 1.09 லட்சம் பரிமாற்றங்கள் நடந்து, ரூ.6,952 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது. 2022, அக்டோபர் மாதம் வரை 730 கோடி பரிமாற்றங்கள் நடந்ததன் மூலம் ரூ.12 லட்சம் கோடி பணம் டிஜிட்டல் பரிமாற்றம் மூலம் நடந்துள்ளது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதன் ஒட்டுமொத்த தாக்கம் பொருளாதார வளர்ச்சியில் நிலையற்றதுத்தான். அதேசமயம், உண்மையான வளர்ச்சி வீதம் என்பது, 2016-17-ம் நிதியாண்டில் 8.2 சதவீதமாகவும், 2017-18ம்  நிதியாண்டில் 6.8% ஆகவும் இருந்தது. கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளில் இருந்த வளர்ச்சி வீதத்தைவிட அதாவது 6.6 சதவீதத்தைவிட அதிகமாகும்.

இனி விமானத்தில் முகக்கவசம் அணியத்தேவையில்லை... அறிவித்தது விமானப்போக்குவரத்து அமைச்சகம்!!

2016,நவம்பர் 6 முதல் டிசம்பர் 30 வரை வங்கியில் அதிகளவு டெபாசிட் செய்தவர்களின் பட்டியை வருமானவரித்துறையினர் எடுத்து, கணக்கில்வராத ஏராளமான பணத்தை கைப்பறி வருமானவரிக்குள் கொண்டுவந்தனர். பணமதிப்பிழப்பால் ஏராளமானோர் வருமானவரிக்குள் வந்துள்ளனர். பான் கார்டு எடுப்போர் வீதம் அதிகரித்துள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

Follow Us:
Download App:
  • android
  • ios