போலீஸ் ஜீப்பில் மோதிய கால்பந்து.. காவல்துறையினர் செய்த வினோத செயல்..
கடந்த வெள்ளிக்கிழமை நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள நெட்டூரில் மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது கால்பந்து, போலீஸ் ஜீப் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் ஒரு வினோதமான நடவடிக்கையை எடுத்தனர். அந்த வழியாக செல்வோருக்கு பாதுகாப்பற்ற முறையில் விளையாடியதாக கூறி, போலீசார் பந்தை கைப்பற்றினர். கடந்த வெள்ளிக்கிழமை நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த நேரத்தில் வாகன சோதனைக்கு வந்த போலீசார், தங்கள் ஜீப்பை குழந்தைகள் விளையாடிய இடத்திற்கு அருகே நிறுத்தினர். அப்போது தாங்கள் விளையாடும் போது, கால்பந்து ஜீப்பின் மீது மோதக்கக்கூடும் என்று குழந்தைகள் காவல்துறையினரிடம் எச்சரித்தனர், ஆனால் காவல்துறையினர் அதை கண்டுகொள்ளவில்லை. இந்த சூழலில் குழந்தைகள் விளையாடும் போது, அ போலீஸ் ஜீப்பின் ஜன்னலில் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் ஆட்டத்தை நிறுத்தி கால்பந்தை கைப்பற்றினர். நெட்டூர் எஸ்.ஐ., தலைமையிலான போலீசார், உரிய நடவடிக்கை எடுத்தனர். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், போலீசார் பந்தை விடுவிக்க மறுத்தனர். போலீசாருக்கும் குழந்தைகளுக்கும் இடையே கால்பந்து தொடர்பான மோதலின் வீடியோ பார்வையாளர்களால் பதிவு செய்யப்பட்டது, பின்னர் அவர்கள் அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். இதனால் இந்த சம்பவம் வைரலாக பரவியது.
பனங்காடு போலீசார் இதுகுறித்து பேசிய போது, அந்த வழியாக செல்பவர்களுக்கு பாதுகாப்பற்ற வகையில் குழந்தைகள் கால்பந்து விளையாடினர். குழந்தைகள் தங்கள் தவறை உணர்ந்து கொள்வதற்காக பந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். குழந்தைகள் வேண்டுமென்றே போலீஸ் ஜீப் மீது கால்பந்தால் அடித்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பனங்காடு போலீசார், குழந்தைகள் கால்பந்து விளையாடுவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஸ்டேஷனில் இருந்து எந்த நேரத்திலும் அவர்கள் பந்தை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஓடும் ரயிலில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய RPF வீரர்.. 4 பேர் பலியான சோகம்..