டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலின் மேலாளர் அங்கு பணிபுரியும் பெண் ஊழியரின் சேலையைப் பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 

புதுடெல்லியின் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பிரைட் பிளாசா என்ற 5 நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணிபுரியும் ஒருவர் ஒருவர் அங்கு வேலை பார்க்கும் பெண் ஊழியரிடம்  சேலையை பிடித்து இழுத்து தவறாக நடந்துள்ளார். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் நிர்வாகம் கண்டுகொள்ளாததையடுத்து அந்த பெண் கடந்த 1ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி விடுதியின் மேலாளர் அந்த பெண்ணை தனது அறைக்கு அழைத்திருப்பதும், பின்னர் அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்த சிசிடிவி வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதன் அடிப்படையில் போலீசார் ஓட்டல் மேலாளரை மூன்று வாரங்களுக்கு பின் இன்று கைது செய்தனர். மேலும், அவரை வேலையிலிருந்து ஓட்டல் நிர்வாகம் நீக்கிவிட்டது குறிப்பிடதக்கது.