The first time in the country is Tamil Nadu it association

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சாப்ட்வேர்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கென தனியாக தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைந்துள்ளனர்.

இந்த தொழிற்சங்கத்துக்கு ‘தமிழக ஐ.டி. ஊழியர்கள் கூட்டமைப்பு’ (எப்.ஐ.டி.இ. தமிழ்நாடு)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு, ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாத்தல் ஆகியவற்றுக்காக இந்த அமைப்பு போராடும்.

தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏறக்குறைய 4.5 லட்சம் இளைஞர்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

உலக அளவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்களே அதிகமாக பணிபுரிந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மட்டும் சென்னைஇன்போசிஸ் நிறுவனத்தில் 17 ஆயிரம், விப்ரோ நிறுவனத்தில் 25 ஆயிரம், டி.சி.எஸ். நிறுவனத்தில் 60 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு டி.சி.எஸ். நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. அதைத் தொடர்ந்து சட்டத்திருத்தம் கொண்டு வந்த தமிழக அரசு ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் உருவாக்க அனுமதி அளித்தது.

இதற்கிடையே சமீபத்தில் காக்னிசன்ட் நிறுவனம் ஏராளமான ஊழியர்களை சரியாக பணியாற்றவில்லை எனக்கூறி வேலையில் இருந்து நீக்கியது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு ஐ.டி. ஊழியர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் ஐ.டி. ஊழியர்களுக்கென தனியாக தொழிற்சங்கம் உருவாகியுள்ளது.

இது குறித்து ‘ ஐ.டி. ஊழியர்கள் கூட்டமைப்பு’தலைவர் பிரமிளாகூறுகையில், “ ஐ.டி. நிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்டாலும் எளிதாக அடுத்த வேலை கிடைத்துவிடும் என நம்புகிறார்கள். 2-வதுஇது போன்ற சங்கத்தில் சேர்ந்தால் நிறுவனத்தில் தன்னை கட்டம் கட்டி விடுவார்களோ என்ற பயத்தாலும் சேர தயங்குகிறார்கள்.

மேலும், எல்லோரும் ஒற்றுமையாக குழுவாக இருப்பது அவசியமாக எனவும் நினைக்கிறார்கள். இருப்பினும் ஆந்திரா, கர்நாடகம், தமிழகத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆன்-லைனில்உறுப்பினராக பதிவு செய்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி மோகன்தாஸ் பாய் கூறுகையில், “ இதுபோன்ற தொழிற் சங்கங்களில் யாரும் சேர விரும்பமாட்டார்கள். 96 சதவீத வேலைவாய்ப்புகள் வௌியில்இருந்தும், வௌி நாடுகளில் இருந்து வருகிறது. இது ஒன்றும் உள்நாட்டு தொழில் அல்ல’’ எனத் தெரிவித்துள்ளார்.