The first Solar and Diesel-run trains in the world were directed to Haryana yesterday

உலகின் முதல் சோலார் மற்றும் டீசலில் இயங்கும் ரெயில்(டி.இ.எம்.யு.) டெல்லியில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று இயக்கப்பட்டது.

இந்த ரெயிலில் உள்ள பெட்டிகளில் உள்ள விளக்குகள், காற்றாடிகள் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களும் சூரிய ஔி மின்சாரத்தால் இயங்கும்.

கடந்த ரெயில்வே பட்ஜெட்டில் பேசிய அமைச்சர் சுரேஷ்பிரபு, அடுத்த 5 ஆண்டுகளில்ரெயில்வே 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் எனத் தெரிவித்து இருந்தார். அதன் ஒருபகுதியாக டீசலில் இயங்கும் எஞ்சின், மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்படும் ரெயில் பெட்டிகளை நேற்று ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று தொடங்கி வைத்தார்.

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து, ஹரியானாவின் பருக் நகர் வந்த இந்த ரெயில் இயக்கப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.54 லட்சம் செலவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சோலார்பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

6 பெட்டிகளின் கூரையில் மொத்தம் 16 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் மூலம் மணிக்கு 340வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 7200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இந்த ரெயில் பெட்டிகளில் உள்ள பேட்டரிகள் மூலம் சேமிக்கப்படும் மின்சாரம், 72 மணிநேரம்(3 நாட்கள்)வரை பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 9 டன் கரியமிலவாயு வௌியேற்றப்படுவது குறைக்கப்படும், ஆண்டுக்கு 21 ஆயிரம் டீசலும், ரூ.12 லட்சமும் சேமிக்கப்படும்.

மேலும், அடுத்த வரும் நாட்களில் இதேபோல் 50 பெட்டிகளிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.