The election reforms we have not met have been implemented

நாங்கள் கோரிய தேர்தல் சீர்திருத்தங்கள் பெரும்பகுதி அரசால் நிறைவேற்றப்படவில்லை, அப்படியே அனைத்தும் உள்ளது, சிறிய மாற்றங்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளஎ என்று தலைமை தேர்தல் ஆணையம் நஜீ்ம் ஜைதி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெறுகிறார்

இந்திய தலைமை தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதிக்கு தற்போது 64 வயது ஆகிறது. 65 வயதானவுடன் அவர் ஓய்வு பெறுவார் என்பதால், நாளையுடன் அவரது பதவிக் காலம் முடிகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து தனது அனுபவம் தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சிகளை அழைத்தோம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படலாம் என்ற புகார்களை பல அரசியல் கட்சியினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். எங்கள் இயந்திரங்களில் மோசடி சாத்தியமல்ல.

மின்னணு இயந்திரங்களில் மோசடி செய்யலாம் என்றும், இயந்திரங்களில் உள்ள முடிவுகளை தொலைபேசி, வைஃபை அல்லது ரகசிய குறியீடுகளை அழுத்தி தெரிந்துகொள்ளலாம் போன்ற பல குற்றச்சாட்டுகள் எங்களிடம் வந்தன. இதனால் நாங்கள் அனைவரையும் அழைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யலாம் என்பதை நிரூபித்துக் காட்டும்படி கேட்டோம்.

இதற்கு மேல் தீர்வு இல்லை

ஆனால், யாரும் இதனை நிரூபிக்க முன்வரவில்லை. இரண்டு கட்சிகள் வந்தன. அவர்களும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வந்ததாக தெரிவித்தனர். இதற்கு மேலும் சிறந்த வழியில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு இருக்க முடியாது.

சீர்திருத்தம்

ஒவ்வொரு தேர்தல் ஆணையமும் பல சீர்த்திருத்தங்களைக் கொண்டுவர விரும்பும்.. நாங்கள் கோரிய சீர்த்திருத்தங்களில் பெரும் பகுதி அப்படியே உள்ளது.

சில விதிகளில் சிறிய மாற்றங்களும் கொண்டுவரப்பட்டன. அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தோம். அந்தச் சீர்திருத்தம் ஏற்கப்பட்டிருந்தால், நான் மேலும் திருப்தியாக இருந்திருப்பேன்.

குற்றங்கள் நடக்கிறது

இந்திய தேர்தல் முறையில் வாக்காளர்கள் கட்டாயப்படுத்துதல், வாக்காளர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு வாக்களித்தல், நேர்மையற்ற வழியில் தேர்தல் நிதிகளை திரட்டி அதை பயன்படுத்துதல், குற்றவியல் பின்னணியை மறைக்கும் வேட்பாளர்கள் என பல முறைகேடுகளைச் சந்தித்து வருகிறது. இத்தகைய பிரச்சனைகளைக் கட்டுக்குள் கொண்டுவர பல கொள்கை மாற்றங்களைத் தேர்தல் ஆணையம் முன்வைத்தது.

நான் ஆற்றிய பணி எனக்கு முழு திருப்தி அளித்தது. தேர்தல் ஆணையத்தின் பணிகள் எல்லாம் வாக்காளர்களின் நலனை மையமாக கொண்டு அமைந்தது. நாங்கள் எந்த முடிவு எடுத்தாலும் முதலில் வாக்காளர்கள் பாதிக்கப்படுவார்களா என்று நன்கு யோசித்துத்தான் முடிவு எடுப்போம்.

இவ்வாறு நஜீம் ஜைதி கூறினார்.