02:23 PM (IST) Feb 01

Union Budget 2026 நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 26 நிமிடங்கள் வாசிப்பு.. மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் முழு விவரம்

பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இவர் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட் இதுவாகும். இந்த முறை பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 26 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். அவை என்ன என்பதை முழுமையாக பார்ப்போம்.

Read Full Story
02:23 PM (IST) Feb 01

Union Budget 2026 Budget 2026: விளையாட்டு மைதானங்களுக்கு 'கார்ப்பரேட்' லுக்? அரசின் மெகா பிளான் இதோ!

விளையாட்டு மைதானங்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 'பணமாக்குதல் திட்டம்' புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்க உதவும் என்றாலும், சாமானியர்களுக்கான கட்டண உயர்வு குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.

Read Full Story
01:54 PM (IST) Feb 01

Union Budget 2026 பட்ஜெட்: காலி பெருங்காய டப்பா..! தமிழகத்துக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஏமாற்றம்தான்..! புட்டு புட்டு வைக்கும் நிபுணர்கள்..!

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், மத்திய பட்ஜெட் விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பை புறக்கணித்து, வெற்று அறிவிப்புகளுடன் இருப்பதாக விமர்சித்துள்ளார். இந்த பட்ஜெட் யாருக்கும் பயனளிக்காத ஒன்று என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

Read Full Story
01:18 PM (IST) Feb 01

Union Budget 2026 Budget 2026: எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கியதா 2026 பட்ஜெட்?! நீங்க எவ்ளோ வரி கட்டனும் தெரியுமா?

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, இது சம்பளதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் வரிச் சேமிப்பைத் திட்டமிட வேண்டியது அவசியமாகிறது.

Read Full Story
01:17 PM (IST) Feb 01

Union Budget 2026 Budget 2026: கல்விக் கடன் சுமை இனி பாதியாக குறையும்! மருத்துவ மாணவர்களுக்கு மெகா சலுகை.!

2026-27 மத்திய பட்ஜெட்டில் மருத்துவக் கல்வி கடன் வரி குறைப்பு, புதிய தென்னை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் விவசாயத்திற்கான 'பாரத் விஸ்தார் ஏ.ஐ' செயலி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

Read Full Story
12:47 PM (IST) Feb 01

Union Budget 2026 இந்த 10 அறிவிப்புகள் இந்தியாவை மாற்றப்போகுது.. பட்ஜெட் 2026-ன் முக்கிய அம்சங்கள்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள், வங்கி அமைப்பு மறுஆய்வு, மற்றும் MSME-களுக்கான நிதி ஊக்கம் போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Read Full Story
12:24 PM (IST) Feb 01

Union Budget 2026 Budget 2026: சுற்றுலாத் துறையில் டிஜிட்டல் புரட்சி.! வழிகாட்டிகளாக மாறும் கன்டென்ட் கிரியேட்டர்கள்!

மத்திய பட்ஜெட் 2026, இந்தியாவின் சுற்றுலா, கலாசார துறைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் பல திட்டங்களை அறிவித்துள்ளது. பொதிகை மலையில் மலையேற்றம், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம், மருத்துவச் சுற்றுலா திட்டம் போன்றவை இதில் அடங்கும்.

Read Full Story
12:21 PM (IST) Feb 01

Union Budget 2026 அசையா சொத்து விவரங்களை மறைத்தால் அபராதம்

மருத்துவம் மற்றும் கல்வி செலவுக்கு வரி பிடித்தம் 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொத்து விற்பனைக்கான டிடிஎஸ் குறைக்கப்படும். அசையா சொத்து விவரங்களை மறைத்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

12:16 PM (IST) Feb 01

Union Budget 2026 புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருகிறது

வரும் ஏப்ரல் 01ம் தேதி முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வருகிறது. திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய டிசம்பரிவிருந்து மார்ச் வரை கால நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12:12 PM (IST) Feb 01

Union Budget 2026 வருமான வரியிலிருந்து முழு விலக்கு

மோட்டார் வாகன விபத்துகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைகளுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

12:06 PM (IST) Feb 01

Union Budget 2026 பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள்

பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

11:56 AM (IST) Feb 01

Union Budget 2026 பொதிகையில் மலையேற்ற திட்டம்

இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலை, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் மலையேறுவதை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

11:50 AM (IST) Feb 01

Union Budget 2026 Budget 2026: ஸ்மார்ட் சிட்டியாக மாறும் சிறு நகரங்கள்.! இந்தியாவின் முகத்தை மாற்றப்போகும் மெகா திட்டங்கள்.!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், உள்கட்டமைப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME), மற்றும் நீர்வழிப் போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Read Full Story
11:48 AM (IST) Feb 01

Union Budget 2026 ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த நிதி ஒதுக்கீடு

ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகழ்வாய்வில் கிடைக்கும் பொருட்கள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

11:45 AM (IST) Feb 01

Union Budget 2026 ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மகளிர் விடுதி

காதி நெசவை மேம்படுத்த இந்தியாவில் ஜவுளி பூங்காக்கள் தொடங்கப்படும். பிராந்திய ரீதியலான 5 பிரத்யேக மருத்துவ மண்டலங்கள் உருவாக்கப்படும். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

11:32 AM (IST) Feb 01

Union Budget 2026 சென்னைக்கு அதிவேக ரயில் சேவை அறிவிப்பு

புதிய தேசிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும். நாடு முழுவதும் மொத்தம் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். சென்னை – ஐதராபாத், பெங்களூரு – சென்னை உள்ளிட்ட அதிவேக ரயில் சேவைகள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

11:30 AM (IST) Feb 01

Union Budget 2026 மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம்!

காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

11:26 AM (IST) Feb 01

Union Budget 2026 பங்குச் சந்தையில் அதிரடி மாற்றம்

மத்திய பட்ஜெட் 2026 வர்த்தக அமர்வின் தொடக்கத்தில், இந்தியப் பங்குச் சந்தைகள் மந்தமான நிலையில் தொடங்கின; முக்கியக் குறியீடுகள் ஆரம்பகட்ட வர்த்தகத்தில் மிகக் குறைந்த அளவிலான மாற்றத்தையே பதிவு செய்தன.

11:23 AM (IST) Feb 01

Union Budget 2026 மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா

எளியமுறையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 350 சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம். செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.O திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பிரத்யேக ரசாயன பூங்காக்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

11:20 AM (IST) Feb 01

Union Budget 2026 உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு!

பயோ ஃபார்மா எனப்படும் உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.