பல்வேறு மாநிங்களில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 3ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காலியான ராஜ்யசபா பதவியிடங்கள்
ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாநிலங்களவை இடம் வழங்கப்படும். அந்த வகையில் தமிழகத்தை பொறுத்த வரை 34 சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு ராஜ்ய சபா இடம் வழங்கப்பட்டு வருகிறது. சுழற்சி முறைகளில் இந்த பதவி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதன் காரணமாக அந்த பதவியிடங்கள் காலி ஆகி உள்ளது. இதனையடுத்து நாட்டில் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள ராஜ்யசபா பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
12 இடங்களுக்கு தேர்தல்
அந்த வகையில் அஸ்ஸாமில் இரண்டு பதவிடங்களுக்கும், பீகாரில் இரண்டு பதவியிடங்களுக்கும், ஹரியானாவில் ஒரு இடங்களுக்கும், மத்திய பிரதேசத்தில் ஒரு இடத்திற்கும், மகாராஷ்டிராவில் இரண்டு இடத்திற்கும், ராஜஸ்தானில் ஒரு இடத்திற்கும், திரிபுராவில் ஒரு இடத்திற்கும், தெலுங்கானாவில் ஒரு இடத்திற்கும், ஒடிசாவில் ஓரு பதவியிடத்திற்கும் தேர்தலானது நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு- வாக்கு எண்ணிக்கை எப்போது.?
அந்த வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெட்புமனு தாக்கல்தொடங்குகிறது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனையடுத்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, வேட்புமனு திரும்ப பெற 26 மற்றும் 27 ஆகிய நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து போட்டி ஏற்பட்டால் ராஜ்ய சபா தேர்தலானது செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறும் எனவும், அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
