Southern Railway: பயணிகளுக்கு முக்கிய செய்தி! ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை - செங்கோட்டை வழி தடத்தில் செல்லும் ரயில்கள் இயக்கம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tambaram Railway Station
பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்புக்காக அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தாம்பரம் ரயில் நிலையத்தில் நடக்கும் பணிகளால் ரயில் ரத்து, பகுதியாக ரத்து, வழித்தட மாற்றங்கள் விவரம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Chennai - Sengottai Train
சென்னை - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில்:
வரும் 15ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். வரும் 16, 17 தேதிகளில் சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து செங்கோட்டைக்கு கிளம்பும். வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும்.
இதையும் படிங்க: என்ன நடக்குமோ? பதற்றத்தில் திமுக அமைச்சர்கள்! சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!எத்தனை மணிக்கு தெரியுமா?
Silambu Express Train
சிலம்பு விரைவு ரயில்:
வரும் 16ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வரும். வரும் 17ம் தேதி முழுமையாக ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. வரும் 15ம் தேதி செங்கோட்டையில் இருந்து கிளம்பும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்து செல்லும். வரும் 17ம் தேதி ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் தெரியுமா?
Chennai - Kollam Express Train
சென்னை - கொல்லம் விரைவு ரயில்:
சென்னை - கொல்லம் விரைவு ரயில் வரும் 15, 16 மற்றும் 17 தேதிகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வரும். கொல்லம் - சென்னை விரைவு ரயில் வரும் 17ம் தேதி கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக சென்னை எழும்பூர் செல்லும். தாம்பரம் செல்லாது.