சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது. இப்போராட்டத்தில் இதுவரையிலும் 32 பேர் பலியாகி இருக்கின்றனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் வன்முறையாளர்கள் பொதுச்சொத்துக்களை சூறையாடி இருக்கின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடக்கும் வன்முறையை மத்திய உள்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி அரசுடன் இணைந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வன்முறையை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம்  அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்துள்ளார். இதனிடையே டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பியர் கிரில்ஸ்டன் சூப்பர் ஸ்டார்..! பட்டைய கிளப்ப மார்ச்சில் வருகிறார்..!

சனிக்கிழமை இரவு முதல் நீடித்து வரும் வன்முறை நேற்று ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நேற்று வரையிலும் பலி எண்ணிக்கை 27 ஆக இருந்து வந்த நிலையில் இன்று காலையில் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் 5 பேர் பலியாகினர். இதையடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

திமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!