ஜார்கண்ட் சட்டப்பேரவை தோல்வியை தொடர்ந்து பாஜகவின் சாம்ராஜ்யம் ஒட்டுமொத்தமாக சரிய தொடங்கியுள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு நாட்டின் 71 சதவீத பகுதியை ஆட்சி செய்த பாஜக, இப்போது 40 சதவீத இடங்களில் ஆட்சி செய்யும் அளவுக்கு கிடுகிடுவென சரியத் தொடங்கிவிட்டது.

இந்திய அரசியலில் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதுவரை யாராலும் அசைக்க முடியாமல் இருந்த காங்கிரஸின் கோட்டையை ஒரே தேர்தலில் மோடி - அமித்ஷா கூட்டணி தகர்த்து எரிந்தது. அந்த ஆண்டு இந்தியாவில் வெறும் 7 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், அதுவே அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 21 மாநிலங்களை பா.ஜ.க கைப்பற்றியது. நாடு முழுவதும் வீசிய மோடி அலையே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

பிரதமர் மோடியும் அமித்ஷாவும் இணைந்து இந்திய அரசியல் வரைபடத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தனர் என்றே கூற வேண்டும். இந்தியா முழுவதும் நீல நிறமாக (காங்கிரஸ்) காட்சியளித்த மாநிலங்களை, 2014-ம் ஆண்டு இவர்கள் இருவரும் காவி நிறமாக (பா.ஜ.க) மாற்றினர். அரசியல் வரலாற்றில் இவர்கள் செய்த மாற்றம் அனைத்துத் தரப்பினரையும் உற்றுக் கவனிக்க வைத்தது. 2018-ம் ஆண்டு பாஜக ஆளாத மாநிலங்கள் எவை என பட்டியலிடும் அளவுக்கு அக்கட்சி முன்னேறியது. அதில், தமிழகம், கர்நாடகா, கேரளா, மிசோரம், பஞ்சாப், ஒடிசா, மேற்குவங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாஜக கூட்டணி ஆட்சியில் இல்லாமல் இருந்தது.

இதனையடுத்து, 2018-ம் ஆண்டு தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநில தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு தவிடுபோடியானது. பாஜகவின் கோட்டையாக இருந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. மிசோரம், தெலங்கானா போன்றவை மாநிலக் கட்சிகளிடம் சென்றது. ஆந்திராவில், கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் சிறப்பு அந்தஸ்து வழங்காததால் பாஜகவைவிட்டு வெளியேறியது. 

அதேபோல், ஜம்மு காஷ்மீரில் நடந்து வந்த மாநிலக் கட்சியின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. இதேபோல் 25 ஆண்டுகளாக நட்டை பிரித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில், அரசியல் ஆபரேஷன் மூலமாக பாஜக ஆட்சிக்கு வந்திருந்தாலும், மகாராஷ்டிராவில் 25 ஆண்டுகளாக நட்டை பிரித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் காங்கிரஸ் காங்கிரஸ்-ஜே.எம்.எம்.-ஆர்.ஜே.டி கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையானதை விட கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. தற்போது நிலவரப்படி, பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 16-ஆக குறைந்துள்ளது.