Asianet News TamilAsianet News Tamil

ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் தடை: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

The CBI Court banned the arrest of P. Chidambaram
The CBI Court banned the arrest of P. Chidambaram
Author
First Published May 30, 2018, 10:59 AM IST


ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது. ஜூன் 5 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்துள்ளது.

2006 ஆம் ஆண்டின்போது ஏர்செல்-மேக்சிஸ் தொடர்பான வழக்கில் 5 ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாகவும், அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கியதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்ஜாமீன்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

அட்நத மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் ப.சிதம்பரம் சார்பாக வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காத தடை விதித்தது. 

ஜூன் 5 ஆம் தேதி வரை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக கார்த்திக் சிதம்பரம் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios