The bride friends were beaten! The groom relative action!
மணமேடையில், மணப்பெண்ணுடன் செல்பி எடுத்துக்கொண்ட இரண்டு இளைஞர்களுக்கு மணமகன் வீட்டார் தர்ம அடி கொடுத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் அருகே பர்ரா என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. திருமண விழாவின்போது, மணப்பெண்களைச் சேர்ந்த குடும்பத்தார், உறவினர்கள், மணமக்களின் நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் திருமண விழாவுக்கு வந்திருந்தனர்.
அங்கு வந்த மணமக்களின் உறவினர்கள், மணமக்களை வாழ்த்தி விட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றனர். இதன் பின்னர், மணமகளின் நண்பர்கள் மேடைக்கு வந்து போட்டோ எடுத்தனர்.
.jpg)
இதன் பின்னர், அவர்கள், மணமகளுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது அவர்கள், மணமகளுடன் நெருக்கமாக அமர்ந்து செல்பி எடுத்துள்ளனர். இதனைப் பார்த்த மணமகனின் உறவினர்கள், அந்த இளைஞர்களை வெளியே போகச் சொல்லியுள்ளனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து செல்பி எடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மணமகளின் நண்பர்களுக்கும், மணமகன் வீட்டாருக்கும் வாக்குவாதம் நடந்தது. அவர்களுக்கு இடையேயான இந்த வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. மணமகனின் உறவினர்கள், அந்த இளைஞர்களை அடித்து உதைத்தனர்.
இதனைத் தடுக்க முயன்ற மணமக்களுக்கும் அடி விழுந்தது. இதனையடுத்து, உறவினர்கள் மணமக்களை பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் திருமண மேடையே போர்க்களமாக மாறியது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணக்கூடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
