The boy was born in an unborn child the father who killed the girl child brutally
ஆண் குழந்தை பிறக்காததால் ஆத்திரமடைந்த தந்தை, பிறந்து ஒரு மாதமே ஆன தனது பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்றைய காலகட்டத்தில் தங்களுக்கு மகன் பிறக்க வேண்டும் என பல பெற்றோர்கள் தவமாய் தவமிருந்தனர். ஆனால் அப்போது பெண் சிசுக் கொலைகள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கடந்த சில வருடங்களுக்கு அரசின் கடுமையான நடவடிக்கைகளால் இந்த கொடூர சம்பவங்கள் நடைபெறுவது ஓரளவு குறைக்கப்பட்டது.
ஆனால், தற்போது இருக்கும் சூழலில் கால மாறிப்போய் தங்களுக்கு எந்த குழந்தை பிறந்தாலும் சந்தோஷம் என பெற்றோர்கள் கருதுகின்றனர். ஆனாலும் தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக பெற்றோர்களே பிறந்த பெண் குழந்தைகளை கொல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இப்படி ஒரு சம்பவம் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்திரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. ராஜேஷ் சவுகான் சங்கீதா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என அவரது குடும்பத்தார் விரும்பினர். ஆனால் பிறந்தது பெண் குழந்தை. தாங்கள் நினைத்தது நடக்காமல் போகவே சங்கீதாவுக்கும், ராஜேஷுக்கும் தினமும் சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்த சங்கீதா வீட்டுக்கு திரும்பி வந்த போது குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, மனைவி சங்கீதாவை அடித்து ஒரு அறையில் வைத்து பூட்டிய ராஜேஷின் குடும்பத்தினர், குழந்தையின் உடலை புதைத்து விட்டனர். கணவரின் வீட்டிலிருந்து தப்பிய சங்கீதா, காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதனையடுத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ராஜேஷையும் அவரது குடும்பத்தாரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
