Asianet News TamilAsianet News Tamil

அயோத்தியில் பிரமாண்டமாக உருவாகும் ராமர் கோவில்.. 2023க்குள் ரெடி.! முழுவீச்சில் பணிகள் !

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தியில் ராமர் கோவில் மிக வேகமாக கட்டப்பட்டு வருகிறது.

The Ayodhya Story A grand Ram Mandir takes shape
Author
First Published Oct 23, 2022, 4:56 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் 2024 ஆம் ஆண்டுக்குள் பிரமாண்டமான கோவிலை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் வேகமாக உழைத்து வருகிறார்கள். மில்லியன் கணக்கான பக்தர்களுக்காக இரவு, பகல் பாராமல் நூற்றுக்கணக்கானோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரலில் ஏசியாநெட் நியூஸ் குழுவினர் சேர்மன் ராஜேஷ் கல்ரா தலைமையில் அயோத்திக்கு சென்றனர்.அப்போது, ​​ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கோயில் கட்டுமானக் குழுத் தலைவரும், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மைச் செயலாளருமான நிருபேந்திர மிஸ்ரா, டிசம்பர் 2023க்குள் கோவில் கட்டப்படும் என்று திட்டத்தை விவரித்தார்.

கட்டுமானம் தற்போது 21 அடியை எட்டியுள்ளது. பன்சி பஹாத்பூரில் இருந்து கற்கள் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கருவறைக்கான தூண் கற்கள் தயார் நிலையில் உள்ளன. கர்ப்பகிரகத்தின் முதல் தளத்தின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. 6.5 மீ உயரமுள்ள கிரானைட் கற்களால் கர்பகிரகம் கட்டப்பட்டு வருகிறது.

The Ayodhya Story A grand Ram Mandir takes shape

இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!

கிட்டத்தட்ட பாதி கற்கள் செதுக்கப்பட்டு தயாராக உள்ளன. கட்டிடத்தை சுற்றி தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் மற்ற கட்டிடங்கள் கட்டும் பணி இன்னும் தொடங்கவில்லை. கடந்த சில மாதங்களாக பெய்த திடீர் மழையால் பின்னடைவு ஏற்பட்டது. L&T மற்றும் TATA கன்சல்டன்சி இன்ஜினியர்கள் மிகவும் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

பிறகு ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்களில் ஒன்றான லார்சன் அண்ட் டூப்ரோவின் திட்ட மேலாளர் வினோத் குமார் மேத்தாவிடம் பேசினோம். 57,400 சதுர அடி பரப்பளவிலும், 67 ஏக்கர் பரப்பளவிலும் கட்டப்பட்ட வளாகத்துடன், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதும், அயோத்தியில் உள்ள ராம் மந்திர் உன்னதமான கைவினைத்திறன் மற்றும் சிறந்த அடையாளமாக இருக்கும்.

பிரமாண்டமாக உருவாகி வரும், ராமர் கோவில் அயோத்தியை சர்வதேச நகரமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழல் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உறுதி செய்வதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் நடந்து வருகிறது. சமீபத்தில் பெய்த மழையால் லக்னோ - அயோத்தி சாலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2023இல் மக்கள் ராமர் கோவிலை முழுவதுமாக தரிசிக்கும் வகையில் தீவிரமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க..23ம் புலிகேசி போல காங்கிரஸ் கட்சி நிலைமை இருக்கு.. பிறந்தநாளில் புலம்பிய கே.எஸ் அழகிரி!

Follow Us:
Download App:
  • android
  • ios