காஷ்மீரில் ராணுவ வீரர்களை குறிவைத்து தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

கடந்த வாரம் ஜம்முவில் செயல்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த (சிஆர்சிஎஃப்) 2,500 வீரர்கள், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி 78 பேருந்துகளில் நேற்று சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் இன்று காலை, ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தீவிரவாதிகளும் எதிர் தாக்குதல் நடத்தினர். 

இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்கள் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 4 ராணுவ வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 44 சிஆர்சிஎஃப் உயிரிழந்து 4 நாட்களே ஆன நிலையில் தற்போது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.