Thank PM Modi Salute India Say Pak Sisters After Release From Jail
இந்திய எல்லைப் பகுதியில் போதை மருந்து கடத்திய வழக்கில் கடந்த 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் சகோதரிகள் 10 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் விடுதலையானதும், இந்தியாவுக்கு வணக்கத்தையும், பிரதமர் மோடிக்கு நன்றியையும் தெரிவித்தனர்.
போதைபொருள் கடத்தல்
இந்திய எல்லைப்பகுதியில் போதைப்பொருள் கடத்தியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ரஷிதா என்பவரும், அவரின் இரு மகள்கள் பாத்திமா, மும்தாஜ் ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்றண் 10 ஆண்டுகள் தண்டனையும், தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதையடுத்து, அமிர்தசரஸ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் குழந்தை
ரஷிதா 2008 ம் ஆண்டு சிறையிலேயே காலமானார். கைது செய்யப்படும் பாத்திமா கர்ப்பிணியாக இருந்ததால், சிறையிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 11 ஆண்டுகளாக சிறுமியும் சிறையில் இருந்துள்ளார்.
விடுதலை
இவர்களின் 10 ஆண்டுகள் தண்டனைக்காலம் 2016-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் ரூ.2 லட்சம் அபராதம் செலுத்தாததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் 4 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. இதனால் அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் ஆணையிட்டது.
பாக்ஸ்மேட்டர்...
பொற்கோயிலுக்கு செல்வோம்
இதையடுத்து இன்று மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். இது குறித்து பாத்திமா பேசுகையில், “ விடுதலையானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் வழக்கில் பிரதமர் மோடி தனிக் கவனம் செலுத்தினார். அவருக்கு எங்களின் நன்றி. மேலும் இந்தியாவிற்கு எங்கள் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் வழிப்பட்ட பின் பாகிஸ்தான் செல்வோம்’ எனத் தெரிவித்தனர்.
