டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி பஞ்சாபி பாக்கில் உள்ள கிளப் சாலையில் டிராய் லவுஞ்ச் உணவகம் மற்றும் பார் ஒன்று அமைந்துள்ளது. அங்கு இன்று மதியம் 1.35 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதுக்குறித்து தகவலறிந்த டெல்லி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் இதுவரை உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இந்த தீவிபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுக்குறித்து டெல்லி தீயணைப்புத்துறை இயக்குனர் அதுல் கார்க் கூறுகையில், பஞ்சாபி பாக்கில் உள்ள கிளப் சாலையில் உள்ள டிராய் லவுஞ்ச் மற்றும் பாரில் மதியம் 1.35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்கு அழைப்பு வந்தது.

இதை அடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் 9 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று தெரிவித்தார். டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளதோடு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
