தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்எல்ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க முயன்ற விவகாரத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ்க்கு தெலங்கா போலீஸார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்எல்ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க முயன்ற விவகாரத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ்க்கு தெலங்கா போலீஸார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.
எல்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், போலீஸார் விசாரணயை தொடர்ந்து நடத்தலாம் என அனுமதியளித்தது. இதையடுத்து, பிஎல் சந்தோஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணையை நீதிபதி கண்காணிக்கஉள்ளார்.
சவார்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தது உண்மையே:மகாத்மாகாந்தி கொள்ளுப்பேரன் உறுதி
தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சியைக் கலைக்கும் முயற்சியில் அந்தக் கட்சி எம்எல்ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க கடந்த மாதம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் 3 பேரைக் கைது செய்தனர். எம்எல்ஏ ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடி அளிப்பதாகவும், அரசுக்கு எதிராக கலகம் செய்தால் கூடுதலாக கோடிகள் கொடுப்பதாகவும் பேரம் பேசப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்பதற்குப் பதிலாக பாரத் ராஷ்ட்ரா சமிதி என்று மாற்றி அமைத்தார். இதன் மூலம் 2024ம் ஆண்டு தேர்தலுக்கு தேசியகட்சியாக களமிறங்க முடிவு எடுத்தார். இதையடுத்துதான் எம்எல்ஏக்களை விலைக்குவாங்கும் முயற்சி நடந்தது.
இது குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் அளித்த பேட்டியில் “ எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பின்னணியில் பாஜக இருக்கிறது.இதற்கு பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் தொடர்புள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பேரம் தொடர்பான 5நிமிடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பையும் கேசிஆர் வெளியிட்டார்.ஆனால், இந்த வீடியோ ஆதாரங்களை பாஜக ஏற்க மறுத்தது. வாடகைக்கு நடிகர்களை நடக்கவைத்து இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக பாஜக தெரிவித்தது
ரூ.100 கோடி பேரம்! டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற 3 பேர் போலீஸில் சிக்கினர்
அது மட்டுமல்லாமல் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய விவகாரம் தொடர்பாக நடுநிலையான அமைப்பு சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பாஜக தெரிவித்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், மாநில போலீஸின் சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கும், அதை நீதிபதி கண்காணிப்பார் என உத்தரவிட்டது.
இதையடுத்து, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேரம் பேசப்பட்டது தொடர்பாக, பாஜக தேசியப் பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷிடம் விசாரிக்க தெலங்கானா போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
