Asianet News TamilAsianet News Tamil

Tushar Gandhi: சவார்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தது உண்மையே:மகாத்மாகாந்தி கொள்ளுப்பேரன் உறுதி

ஆங்கிலேயர்களிடம், வீர சவார்க்கர் நட்புறவாக இருந்ததும், சிறையில் இருந்தபோது மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்ததும் உண்மைாதான் என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும் எழுத்தாளருமான துஷார் காந்தி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

It is true that Savarkar wrote a letter of apology to the British to To get out of jail: Tushar Gandhi
Author
First Published Nov 18, 2022, 4:48 PM IST

ஆங்கிலேயர்களிடம், வீர சவார்க்கர் நட்புறவாக இருந்ததும், சிறையில் இருந்தபோது மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்ததும் உண்மைாதான் என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும் எழுத்தாளருமான துஷார் காந்தி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை மகாராஷ்டிராவில் சென்று வருகிறது. ராகுல் காந்தி நேற்று முன்தினம் சவார்க்கர் குறித்து பேசிய கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

ராகுல் காந்தி பேசுகையில் “சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு சவார்க்கர் உதவி செய்தார் நட்போடுஇருந்தார். சிறையில் இருந்தபோது, அங்கிருந்து வெளியே வருவதற்கு  மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துதான் சவார்க்கர் வெளியேறினார்.

It is true that Savarkar wrote a letter of apology to the British to To get out of jail: Tushar Gandhi

உங்களின் ஒழுங்கான வேலையாள் எழுதி சவார்க்கர் ஆங்கிலேயரிடம் கையொப்பமிட்டுள்ளார். ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியேவந்த சவார்க்கர்தான் பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தலைவர்” எனத் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்தனர். மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சியும் எதிர்த்தது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் ராகுல் காந்தியின் பேச்சில் உடன்படவில்லை எனத் தெரிவித்தார்.

சவார்க்கரை அவமதித்துவிட்டார்! ராகுல் காந்தி மீது சவார்க்கர் பேரன் போலீஸில் புகார்

ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டித்து நேற்று தானேவில் பாலசாஹேப்சிவசேனா கட்சி சார்பில் கண்டனப் பேரணியும் நடந்தது. ராகுல் காந்தி மீது தானே நகர் காவல்நிலையத்தில் பாலசாஹேபஞ்சி சிவசேனா கட்சித் தலைவர் வந்தனா டோங்கரே அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

It is true that Savarkar wrote a letter of apology to the British to To get out of jail: Tushar Gandhi

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் இணைந்தார்

இந்நிலையில், ராகுல் காந்தி, அகோல மாவட்டத்தில் உள்ள பாலாபூரில் இன்று காலை 6 மணிக்கு நடை பயணத்தைத் தொடங்கினார். நடைபயணம் தொடங்கி சில மணிநேரத்தில் ஷேகான் பகுதிக்கு வந்தபோது ராகுல் காந்தியுடன் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியும் இணைந்தார். 

ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரனும், மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும்  ஜனநாயகத்தைக் காக்கநடக்கும் காட்சி என்று காங்கிரஸ் கட்சி புகழாரம் சூட்டியது.

 

இந்நிலையில், , சவர்க்கர் ஆங்கிலேயரிடம் கடிதம் எழுதிக்கொடுத்தது உண்மையா என்று துஷார் காந்தியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் பதில் அளிக்கையில் “ ஆங்கிலேயர்களிடம், வீர சவார்க்கர் நட்புறவுடன் நெருக்கமாக இருந்தது உண்மைதான். 

முற்றும் சவார்க்கர் விவகாரம்: ராகுல் காந்தி மீது மகாராஷ்டிரா போலீஸார் வழக்குப்பதிவு

சிறையில் இருந்து வெளியே வருவதற்காக ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததும உண்மைதான். இதுபோன்ற தகவல்களை வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தில், வாட்ஸ்அப் வதந்தியில் இருந்து எடுக்கவில்லை. ஆதாரத்துடன் பேசுகிறேன், வரலாற்றில்  ஆதாரமும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios