Asianet News TamilAsianet News Tamil

அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி.. பொதுவெளியில் தன் தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை - என்ன காரணம்?

Security Officer Suicide : கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் காவலர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் பல அரங்கேறிவருகின்றது. அந்த வகையில் தான் ஒரு அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

telangana minister security officer committed suicide in front of his daughter ans
Author
First Published Nov 6, 2023, 7:06 AM IST | Last Updated Nov 6, 2023, 7:06 AM IST

அமைச்சர் சபிதா இந்திராரெட்டி, இவர் தெலுங்கானா மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக இருக்கின்றார். இவருடைய பாதுகாப்பு அதிகாரியின் பெயர் தான் பைசல் அலி. கடந்த பல ஆண்டுகளாக அமைச்சருடைய பாதுகாப்பு அதிகாரியாக திகழ்ந்துவரும்  ஃபைசல் அலி, நேற்று காலை தனது பணிக்கு புறப்படும் முன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பைசல் அலி தனது குடும்ப நலனுக்காக பல்வேறு இடங்களில் கடன் பெற்றுள்ளதாகவும், இணைய வழியில் உள்ள சில செயலிகள் மூலமும் கடன் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் சுமை அதிகமான நிலையில், அதை கொடுத்தவர்கள் பலரும் திருப்பி கேட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் பாதுகாப்பு அதிகாரி பைசல் அலி.

களமசேரி குண்டு வெடிப்பு: வகுப்புவாதத்தை தூண்டியதாக 54 வழக்குகள் பதிவு! 

இந்நிலையில் நேற்று நவம்பர் 5ம் தேதி காலை வழக்கம்போல தனது பணிகளை செய்ய புறப்பட்டுள்ளார். அமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக புறப்பட்ட அவர், அமைச்சரின் வீட்டு அருகே உள்ள ஒரு தேநீர் கடையில் தேனீர் குடிக்க சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவருடைய மகள் அவரைத் தேடிக் கொண்டு அமைச்சர் வீட்டிற்கு சென்ற நிலையில், தனது தந்தை தேநீர் கடையில் அமர்ந்திருப்பதை கண்டுள்ளார். 

உடனே அவரிடம் விரைந்து, அப்பா காலையிலேயே கடன் கொடுத்தவர்கள் நம் வீட்டு வாசலில் முன்னால் வந்து நின்று கூச்சலிடுகின்றனர். பணத்தை இன்று செலுத்தி ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றனர் என்று கூறியுள்ளார். இந்த சூழலில், ஏற்கனவே கடும் மன உளைச்சலில் இருந்த பைசல் அலி, யாரும் சற்றும் எதிர்பாராத நேரத்தில் தேநீர் கடையில் நின்று கொண்டு இருந்த அதே நேரம், தனது மகளின் கண் முன்னே தனது துப்பாக்கி எடுத்து தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் 

துப்பாக்கி சத்தம் கேட்ட பொதுமக்கள் பயந்து ஓடிய நிலையில், செய்வது அறியாது அந்த மகள் அங்கேயே திகைத்துபோயுள்ளார். பிறகு சம்பவம் குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, பாதுகாப்பு அதிகாரி பைசல் அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி அவர்களும் பைசல் அலியின் மனைவி மற்றும் மகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை: காங்கிரஸை வறுத்தெடுத்த பிரதமர் மோடி!

போலீசார் விசாரணையில் பைசலுக்கு அதிக அளவில் கடன் இருந்தது தெரிய வந்துள்ளது, ஒரு அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி கடன் சுமை காரணமாக நட்ட நடு சாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios