கணவரைக் கொலை செய்த தந்தையை தூக்கிலிடக்கோரி வரும் 23-ஆம் தேதி, இளைஞர்களைத் திரட்டி ஐதராபாத்தில் பேரணி நடத்தப்போவதாக அமிர்தவர்ஷினி அறிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், மிர்யாலகுடா பகுதியைச் சேர்ந்த பெருமல்ல பிரனய்குமார் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனியார் மருத்துவமனை வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். 

மனைவி அம்ருதவர்ஷினி மற்றும் தாய் பிரேமலதா ஆகியோர் உடன் சென்றபோது, அவரைத் தொடர்ந்து வந்த ஒரு நபர் அவரது கழுத்தில் கத்தியால் வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரனய் என்பவரை அம்ருதவர்ஷினி காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்துக்கு, அம்ருதவர்ஷினியின் தந்தை மாருதி ராவ் எதிர்ப்பு தெரிவித்தார். திருமணம் முடிந்த பிறகும், அம்ருதவர்ஷினியையும், பிரனய்யையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 

இந்த நிலையில் அம்ருதவர்ஷினி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து தந்தையிடம் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், மாருதிராவ், கருவை கலைக்க வற்புறுத்தினார். அதற்கு நான் உடன்படாததால், பிரனய்யை கூலிப்படை ஏவி தனது தந்தை கொலை செய்திருப்பதாக அம்ருதவர்ஷினி குற்றம் சாட்டினார். பிரனய் கொல்லப்பட்ட வழக்கில், அம்ருதவர்ஷினியின் தந்தை மாருதி ராவ், சகோதரர் ஷ்ரவண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்களது நண்பர் அப்துல் கரீம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரனய்யை பின்னால் இருந்து கத்தியால் தாக்கியதாக கூறப்படும் பீகாரைச் சேர்ந்த ஷர்மா என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அம்ருதவர்ஷினி, தந்தைக்கு எதிராக பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். கணவர் வினய்யை கொலை செய்த தந்தையை தூக்கிலிடக்கோரி வரும் 23 ஆம் தேதி இளைஞர்களைத் திரட்டி பேரணி நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.