கணவரை கொன்ற இடத்தில் என்னையும் கொன்றுவிடுங்கள்... கதறி அழுது துடிக்கும் கர்ப்பிணி மனைவி..!

தன்னுடைய கணவனின் மரணம் தொடர்பாக சென்ன கேசவலுவின் மனைவி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் எண் கணவருக்கு எதுவும் ஆகாது. திரும்பி வந்து விடுவார் என்றுதான் கூறிக் கொண்டிருந்தேன். ஆனால், என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய கணவன் இறந்த இடத்திற்கு என்னையும் கூட்டிச்சென்று சுட்டு கொல்லுங்கள் என போலீசாரிடம் கேட்டு கொள்கிறேன்.

telangana encounter... chennakesavulu wife comments

என்னுடைய கணவன் இறந்த இடத்திற்கு என்னையும் கூட்டிச்சென்று சுட்டு கொல்லுங்கள் என கதறியபடி குற்றவாளியின் மனைவி தெரிவித்துள்ளார்.  

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே உள்ள செம்ஷாபாத்தை சேர்ந்தவர் கால்நடை பெண் மருத்துவர் பிரியா ரெட்டி கடந்த 28-ம் தேதி தொண்டேபல்லி சோதனைச்சாவடி அருகே தனது மொபட்டை நிறுத்திவிட்டு மாதப்பூர் சென்று மீண்டும் சோதனை சாவடி அருகே வந்தார். அப்போது நாராயணபேட்டையை சேர்ந்த லாரி ஓட்டுநர் முகமது ஆரிப், கிளீனர்கள் சென்னகேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேரும் திட்டமிட்டு பிரியா ரெட்டியின் மொபட்டை பஞ்சர் செய்தனர். பின்னர் உதவி செய்வதுபோல் நடித்து அவரை கடத்திச்சென்று வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

telangana encounter... chennakesavulu wife comments

சுயநினைவு இழந்த பெண் டாக்டரை சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ள சட்டான்பல்லி என்ற இடத்திற்கு லாரியில் கடத்திச்சென்று அங்குள்ள பாலத்தின் அடியில் அவரை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முகமது ஆரிப் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேரையும் நடுரோட்டில் வைத்து என்கவுன்டர் செய்ய வேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு மகளிர் அமைப்பினர், மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

telangana encounter... chennakesavulu wife comments

இந்நிலையில், பெண் மருத்துவர் பிரியா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொன்ற வழக்கில் கைதான குற்றவாளிகள் 4 பேர் நேற்று அதிகாலையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பெண்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பும், மற்றொரு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  

telangana encounter... chennakesavulu wife comments

இந்நிலையில், தன்னுடைய கணவனின் மரணம் தொடர்பாக சென்ன கேசவலுவின் மனைவி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் எண் கணவருக்கு எதுவும் ஆகாது. திரும்பி வந்து விடுவார் என்றுதான் கூறிக் கொண்டிருந்தேன். ஆனால், என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய கணவன் இறந்த இடத்திற்கு என்னையும் கூட்டிச்சென்று சுட்டு கொல்லுங்கள் என போலீசாரிடம் கேட்டு கொள்கிறேன். அவர் இறந்த பிறகு எனக்கு இனி எதுவுமே இல்லை. ஒரு வருடத்திற்கு முன்னால் தான் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. நான் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனிடையே, கடந்த வாரம் சின்ன கேசவலுவின் தாயார் அந்த பெண் போலவே அவனையும் போலீசார் எரித்து கொல்ல வேண்டும் என, கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

telangana encounter... chennakesavulu wife comments

இதயைடுத்து, முகமது ஆரிப்பின் தயார் என் மகன் இறந்து விட்டான் என்பதைத் தவிர அவரால் வேறெதுவும் பேச முடியவில்லை. சிவாவின் தந்தை ராமப்பா கூறுகையில் என் மகன் தவறு செய்திருக்கலாம். ஆனால், இதுபோன்ற முடிவு இருந்திருக்கக்கூடாது. எவ்வளவோ பேர் பலாத்காரம், கொலை செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஏன் இவ்வாறு நடத்தப்படவில்லை என்றார். குற்றவாளிகள் 4 பேரின் குடும்பமும் அதிகம் படிக்காத ஏழ்மையான குடும்பம். 4 பேரையும் பெற்றோர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. கைநிறைய சம்பாதித்த அவர்கள் இஷ்டத்துக்கு செலவு செய்தனர். சிறு வயதிலேயே மது பழக்கத்திற்கும் அடிமை ஆனார்கள் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios