Telangana Chief Minister Chandrashekharaj said that the bribe was beaten by the buyers.

லஞ்சம் வாங்குபவர்களை செருப்பால் அடியுங்கள் என தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் தெரிவித்த பேச்சால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தெலுங்கானாவில் சில நாட்களுக்கு முன்பு எஸ்சிசிஎல் அமைப்பின் தேர்தல் நடைபெற்றது. அதில் ராஷ்டிய சமிதி கட்சி வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, எஸ்சிசிஎல்-ல் லஞ்சத்தை அனுமதிக்க கூடாது எனவும், ஒருவேளை எந்த அதிகாரியாவது அடிப்படை தொழிலாளர் பயன்களை பெற லஞ்சம் கேட்டால் அவர்களை செருப்பால் அடியுங்கள் எனவும் பேசினார். 

எஸ்சிசிஎல் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்தால் அதற்கான கல்வி செலவை மாநில அரசே பொறுப்பேற்கும் எனவும், அவர் தெரிவித்தார். 

முதலமைச்சரின் அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.