தெலுங்கானாவில் பயங்கரம்... 70 தெரு நாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொடூரக் கொலை!
ஸ்ட்ரே அனிமல் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதி கவுதம் கூறுகையில், பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டனர் என்று கூறியுள்ளார்.
தெலுங்கானாவில் 70 தெரு நாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ட்ரே அனிமல் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ப்ரீத் அனிமல் ரெஸ்க்யூ ஹோம் ஆகிய விலங்குகள் நல அமைப்புகள் புகார் அளித்துள்ளன.
தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள அலுரு மண்டலத்துக்கு உட்பட்ட மச்செர்லா கிராமத்தில் 70 தெருநாய்களைக் கொன்று புதைத்துள்ளனர் என அந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
ப்ரீத் அனிமல் ரெஸ்க்யூ ஹோம் அமைப்பின் பிரதிநிதி சாய்ஸ்ரீ ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்மூர் காவல் நிலையத்தில் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் பதிவு செய்துள்ளார். விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மச்செர்லா பஞ்சாயத்துத் தலைவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டதாகவும் சாய்ஸ்ரீ கூறியிருக்கிறார்.
தமிழக பட்ஜெட்டில் எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி? கடந்த ஆண்டு பட்ஜெட்டுடன் ஓர் ஒப்பீடு
புகார் அளித்துள்ள மற்றொரு அமைப்பான ஸ்ட்ரே அனிமல் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதி கவுதம் கூறுகையில், பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டனர் என்று கூறியுள்ளார்.
இது தொடர்காக தனக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து பெயரைக்க குறிப்பிட்டாமல் மின்னஞ்சல் வந்தது என்றும் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட 70 நாய்களில் ஒன்று கிராமத்தில் வசிக்கும் ஒரு வீட்டு நாய் என்றும் மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்ததாக கவுதம் கூறுகிறார்.
மாவட்ட கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலரைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கப்பட்டது எனவும், பின்னர் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் கவுதம் சொல்கிறார்.
ஆன்லைனில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?