Tejasvi Surya: விமானத்தின் கதவு திறந்த விவகாரம்.. மன்னிப்பு கேட்ட பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா!
விமானத்தின் அவசரகால கதவை திறந்தது தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி விளக்கமளிக்க இண்டிகோ நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பாஜக பிரமுகர்கள் குறிபிட்ட விமானத்தில் பயணித்துள்ளனர். அவர்களில் ஒருவர் விமானம் புறப்பட்டப்போது அவசர கால கதவை திறந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையானது.
விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டு பாதுகாப்பு சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர், அவசரகால கதவை திறந்தவர்கள், அண்ணாமலையும், தேஜஸ்வி யாதவும் என்றும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாகும்.
இதையும் படிங்க..2 ஆர்வக்கோளாறுகள்! உருட்டாமல் இருந்தால் சரி! விமான விவகாரத்தில் அண்ணாமலையை கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி
மேலிட அழுத்தம் காரணமாக இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மத்திய அமைச்சகத்தில் தலையீட்டின்பேரில் இந்த சர்ச்சை மூடி மறைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலரால் குற்றஞ்சாட்டப்பட்டது. விமானத்தின் அவசரகால கதவை திறந்தது தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி விளக்கமளிக்க இண்டிகோ நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, குறிப்பிட்ட விமானத்தில் பயணித்த குறிப்பிட்ட பாஜக பிரமுகர்கள் இருவரும் விசாரணைக்காக அழைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி இன்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!
பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா தெரியாமல் அவசரகால கதவை திறந்துவிட்டதாகவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் சிந்தியா, தவறுதலாக அவசரகால கதவு திறக்கப்பட்டுள்ளது என தனது செயலுக்கு எம்.பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று கூறினார்.
இதையும் படிங்க..6 கோடி இன்சூரன்ஸ் பணம்! அரசு ஊழியரின் விபத்து நாடகம்.. துணிவுடன் தூக்கிய போலீஸ்! வேற மாறி சம்பவமா இருக்கே!