கேரள மாநிலத்தில் உள்ள வடக்கு கன்னூர் மாவட்டம் பையனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சுவாகாவும், அவரது சகோதரரும் இணைந்து கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழையால், நாளுக்கு நாள் சேதங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. வெள்ளத்தால் பல வீடுகள் முழுவதுமாக மூழ்கியுள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் இன்றி, பல பிரபலங்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அதிகாரிகள் அனைவரையும் மீட்டு பத்திரமாக முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.  மேலும், மண் சரிவு காரணமாகவும் கேரளாவில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக பலர் வீடு, உடை, உணவு இன்றி தவித்து வருகின்றனர். 

இதனால் முடிந்த உதவிகளை கேரள மக்களுக்கு செய்யுமாறு அம்மாநில முதமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரும் பணமாகவும், பொருள்களாகவும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள்.  ஏற்கனவே தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரள மக்களுக்கு நிதி உதவி கொடுத்துள்ளனர்.  

கேரளாவில் மலையாள நடிகர்களுக்கு இணையான ரசிகர்களைக் கொண்ட ரஜினி, கமல் கூட 20 லட்சங்களையே கொடுத்துள்ளனர். அதுவும் அஜித் விஜய் இன்னும் வாய் திறக்கவே இல்லை, இந்நிலையில்,  கண்ணூர் மாவட்டத்தில் பையனூர் ஷெனாய் மேல் நிலைப்பள்ளி +1 மாணவி சவுஹா கேரள முதல்வர் பிணராய் விஜயனுக்கு பள்ளி முதல்வர் வழியாக எழுதியுள்ள கடிதம் சினிமா நட்சத்திரங்களின் நிவாரணங்களை மிஞ்சுவதாகவுள்ளது. 

கேரள மக்களின் துயரத்தில் பங்கு கொள்ள தனக்கும் தனது தம்பி பிரம்மனுக்கும் சேர்ந்து தங்களது தந்தை பையனூர் பகுதியில் கிரயம் செய்து வைத்திருக்கும் ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள குடும்ப நிலத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்குவதாக கடிதத்தில் மாணவி சவுஹா குறிப்பிட்டுள்ளார்.

 இதுகுறித்து பள்ளி முதல்வர் மூலமாக அவர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதற்கு சகோதரர்களின் தந்தையும் சம்மதம் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 50 லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை நிவாரணத்துக்காக வழங்க முன்வந்த மாணவி வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

இதேபோல, அனுப்பிரியா என்கிற விழுப்புரம் சிறுமி,  5 உண்டியல்கள் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த ரூ.9 ஆயிரத்தை  கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி இருந்தாள். தனது இதய ஆபரேஷனுக்காக சமூக வலைதளங்கள் மூலம் திரட்டிய பணத்தில் 5000-த்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கி நெகிழச் செய்திருக்கிறார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அட்சயா என்ற சிறுமி உதவியிருந்தாள், இப்படி தங்களின் தேவைகளுக்காக சேர்த்து வைத்த பணத்தை உதவிருப்பதால் மனிதம் மரணிக்கவில்லை என சிறுமிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.