சந்திரயான்-3க்கான ஏவுதளத்தை உருவாக்க உதவிய தொழில்நுட்ப வல்லுநர்.. தற்போது இட்லி விற்பதால் அதிர்ச்சி..
சந்திரயான்-3க்கான ஏவுதளத்தை உருவாக்க உதவிய தொழில்நுட்ப வல்லுநர் இப்போது ராஞ்சியில் உள்ள ஒரு கடையில் இட்லி விற்று வருகிறார்.
![Technician Who Helped in Building Launchpad For Chandrayaan-3 Now Sells Idli in Ranchi Rya Technician Who Helped in Building Launchpad For Chandrayaan-3 Now Sells Idli in Ranchi Rya](https://static-gi.asianetnews.com/images/01hapbw1dmgbgsk1z1zexsfx5n/f6pgvy9waaal0pg--2-_363x203xt.jpg)
ராஞ்சியைச் சேர்ந்த தீபக் குமார் உப்ராரியா, HEC (Heavy Engineering corporation Limited) என்ற நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் அவர் தற்போது. ராஞ்சியில் உள்ள துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்றத்திற்கு எதிரே ஒரு இட்லி கடையை நடத்தி வருகிறார். இஸ்ரோவின் சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்க தீபக் பணியாற்றினார். ஆனால், கடந்த 18 மாதங்களாக அவருக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ,
இட்லி விற்பதால் அவர் தனது வேலையை விட்டுவிட்டார் என்று அர்த்தமில்லை. அவர் காலையில் இட்லி விற்றுவிட்டு மதியம் அலுவலகம் செல்கிறார். மாலையில் அவர் வீட்டிற்குச் செல்வதற்கு முன் மீண்டும் இட்லிகளை விற்கிறார். இதுகுறித்து பேசிய அவர் “முதலில் நான் கிரெடிட் கார்டு மூலம் எனது வீட்டை நிர்வகித்தேன். 2 லட்சம் கடன் பெற்றேன். நான் கடனை திருப்பி செலுத்தாதவனாக அறிவிக்கப்பட்டேன். அதன் பிறகு உறவினர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வீட்டை நடத்த ஆரம்பித்தேன். இதுவரை நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளேன். நான் யாரிடமும் பணத்தை திருப்பித் தராததால், தற்போது மக்கள் கடன் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். பின்னர் எனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சில நாட்கள் வீட்டை நடத்தினேன்.” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் “எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளிக்குச் செல்கிறார்கள். இந்த வருடம் அவனுடைய பள்ளிக் கட்டணத்தை என்னால் இன்னும் கட்ட முடியவில்லை. பள்ளி மூலம் தினமும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.
பழிக்குப் பழி! கனடாவின் தூதரக அதிகாரி 5 நாட்களில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த தீபக் தனியார் நிறுவனத்தில் தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு, 2012 ஆம் ஆண்டில், HEC நிறுவனத்தில் ரூ.8,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்நிறுவனத்தில் அவர் பெரிய நம்பிக்கை வைத்திருந்தாலும் அவருக்கு சாதகமான விஷயங்கள் நடக்கவில்லை. கடந்த 18 மாதமாக சம்பளம் பெறாததால் தற்போது இட்லி விற்பது மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்.