Asianet News TamilAsianet News Tamil

100 கார்களைத் திருடி ரௌடி கும்பலுக்கு விற்றவர் கைது! எம்.டெக். படிச்சுட்டு கார் திருடனாக மாறியது ஏன்?

கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி தாருல்ஷாஃபாவில் கருப்பு நிற எஸ்யூவியை திருடியதாகவும், ஐந்து நாட்களுக்குப் பிறகு டெலிபாக்கில் இருந்து மற்றொரு வெள்ளை நிற எஸ்யூவியைத் திருடியதாகவும் ஷெகாவத் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Techie stole 100 cars & sold them to Lawrence Bishnoi gang, held sgb
Author
First Published Jan 30, 2024, 3:06 PM IST

43 வயதான சதேந்திர சிங் ஷெகாவத் பிடெக் மற்றும் எம்பிஏ படித்தவர். அவர், கார் சர்வீஸ் சென்டர்களுக்கு அடிக்கடி சென்று, அங்குள்ள ஊழியர்களுடன் பழகியுள்ளார். அங்கிருக்கும் கார்களில் ஜிபிஎஸ் டிராக்கரைப் பொறுத்திவிடுவார். ஊழியர்கள் மூலம் அந்தக் கார்களின் எஞ்சின் நம்பர்களையும் தெரிந்துகொள்வார். பின், கார் சாவிகளை நகல் எடுத்து சைலெண்ட்டாக கம்பி நீட்டிவிடுவார்.

பிறகு சாவின் நகலைக் கொண்டு போலிச்சாவியைத் தயாரித்துவிட்டு, தான் பொருத்திய GPS டிராக்கர்களின் உதவியுடன் அந்த கார்களைக் கண்டுபிடித்து அபேஸ் செய்துவிடுவார். அதுவும் சிறிய கார்களைத் தவிர்த்து, எஸ்யூவி கார்களையே குறிவைத்துத் திருடியுள்ளார் ஷெகாவத்.

இப்படி திருடிய கார்களை ராஜ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிசை் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் ரவுடி கும்பலுக்கு விற்றுவிடுவார். 2002ஆம் ஆண்டு முதல், 100க்கும் மேற்பட்ட கார்களைத் திருடிச் சென்று விற்றிருக்கிறார். இவரை 2023ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து போலீசார் சேஸ் செய்து வருகிறார்கள். இந்நிலையில், திங்கள்கிழமை போலீசார் ஷெகாவத்தைக் கைது செய்துள்ளனர்.

5 ட்ரில்லியன் ஜிடிபிக்கு இன்னும் 3 வருஷந்தான்... இந்திய பொருளாதாரம் 3வது இடம் பிடிக்கும்: நிதி அமைச்சகம்

Techie stole 100 cars & sold them to Lawrence Bishnoi gang, held sgb

"விசாரணையின்போது, ஷெகாவத் திருடப்பட்ட கார்களை லாரன்ஸ் பிஷ்னோய்க்கு வழங்கியதாக ஒப்புக்கொண்டார்" என போலீசார் கூறுகின்றனர். இவர் மீது பல திருட்டு வழக்குகள் மகாராஷ்டிரா, ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பதிவாகியுள்ளன என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி தாருல்ஷாஃபாவில் கருப்பு நிற எஸ்யூவியை திருடியதாகவும், ஐந்து நாட்களுக்குப் பிறகு டெலிபாக்கில் இருந்து மற்றொரு வெள்ளை நிற எஸ்யூவியைத் திருடியதாகவும் ஷெகாவத் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

டிசம்பர் 28, 2023 அன்று, விபுல் காண்டில் வசிக்கும் நரேந்திர நாத் சுக்லா, கோமதி நகர் காவல் நிலையத்தில் தனது ஃபார்ச்சூனர் கார் காணாமல் போனது குறித்து புகார் அளித்தார். இரவில் வீட்டிற்கு வெளியில் நிறுத்தியிருந்த கார் திருடப்பட்டதாக தனது புகாரில் கூறியிருந்தார். அதன் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

இதற்கு முன்பு தெலுங்கானா மற்றும் கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டுக்கு முன்புதான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

12 லட்சம் சம்பாதிச்சாலும் வருமான வரியே கட்ட வேண்டாம்! இந்த ஐடியாவைத் தெரிஞ்சுக்கோங்க!

Follow Us:
Download App:
  • android
  • ios